கணவர் இழப்பிலிருந்து மீள முடியாமல் காட்டுக்குள் சென்ற ஸ்ருதி ஷண்முகப்ரியா.! வெளியான வீடியோ.!

சின்னத்திரை நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியா தனது கணவரின் இழப்பிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார். அதற்காக அவர் தற்போது செய்திருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நாதஸ்வரம் சீரியல் மூலமாக அறிமுகமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, வாணி ராணி, கல்யாணப் பரிசு, பாரதிகண்ணம்மா போன்ற பல சீரியல்களின் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் கடந்த ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இணையத்தில் வைரலானது. இந்த ஜோடிகள் மிக அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கணவர் இழப்பிலிருந்து மீள முடியாமல் காட்டுக்குள் சென்ற ஸ்ருதி ஷண்முகப்ரியா.! வெளியான வீடியோ.! 1

விளம்பரம்

தனது கணவருடன் இணைந்து வீடியோக்கள் செய்வது, ரில்ஸ்கள் செய்து அதை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுவது என மகிழ்ச்சியாக இருந்து வந்த அவரின் வாழ்க்கையில் புயல் வீசியது. கார்டியாக் அரஸ்ட் காரணமாக அரவிந்த் சேகர் திடீரென உயிரிழந்தார். கணவரின் உடல் மட்டும்தான் என்னுடன் இல்லை ஆனால் ஆத்மா என்னுடன் தான் இருக்கிறது என்று சொல்லி கணவரின் இழப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார் ஸ்ருதி. இந்த நிலையில் அவர் இயற்கையின் துணையை தேடி இருக்கிறார். காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ள அவர் அங்கு எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இழப்பிலிருந்து மீண்டு வர இயற்கையின் துணையை நாடி இருப்பதாகவும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

தொடர்புடையவை  என் புள்ள வாழ்க்கையே போச்சு.! ரட்சிதா தினேஷ் பிரிவு குறித்து கண்கலங்கிய தினேஷ் பெற்றோர்கள்.!

கணவர் இழப்பிலிருந்து மீள முடியாமல் காட்டுக்குள் சென்ற ஸ்ருதி ஷண்முகப்ரியா.! வெளியான வீடியோ.! 3

விளம்பரம்

“இந்தப் பயணம் என்பது நம்மை ஆற்றுப்படுத்துகிறது. நம் காயங்களுக்கு மருந்து இடுகிறது. இந்த அருமையான பயணத்தை ஏற்பாடு செய்து கொடுத்த குழுவினருக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். பின்னர் தனது கணவரை அந்த பதிவில் டேக் செய்திருக்கும் அவர், “நாம் இருவரும் இணைந்து இதுபோல் நிறைய பயணங்கள் செய்வோம், நம்முடைய டைரியின் பக்கங்களில் இது போல நிறைய பயணம் செய்த பக்கங்கள் வரட்டும்” என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். ஸ்ருதியின் இந்த பதிவிற்கு கீழே பலரும் தங்களது ஆறுதல்களை கூறி வருகின்றனர்..! அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Instagram Video Credits: Shruthi Shanmugapriya

விளம்பரம்

Leave a Comment