ராதிகா சரத்குமார் கட்டிய புது வீட்டின் கிரஹபிரவேசத்திற்கு வந்த தனுஷ்.! வெளியான புகைப்படங்கள்.!

தனுஷ் இன்று திடீரென ராதிகா சரத்குமாரை அவரது வீட்டிற்க்கே சென்று சந்தித்திருக்கிறார். இந்த புகைப்படங்களை ராதிகா தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தனது 50-வது பட லுக்கில் ராதிகா வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார் தனுஷ். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் ஓரளவிற்கு முடிந்துள்ள நிலையில் படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தனது ஐம்பதாவது படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை அவரே எழுதி இயக்கி நடிக்கவும் இருக்கிறார்.

ராதிகா சரத்குமார் கட்டிய புது வீட்டின் கிரஹபிரவேசத்திற்கு வந்த தனுஷ்.! வெளியான புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

தனுஷ் தனது ஐம்பதாவது படத்திற்கு ‘ராயன்’ என பெயர் வைத்திருக்கிறதாகவும் இதுவரை பார்க்காத வகையில் வித்தியாசமான தோற்றத்தில் மொட்டை தலையுடன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பம் ஆகிவிட்டதாக சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார். அந்த போஸ்டரிலும் மொட்டைத் தலையுடன் அவர் நிற்கும் புகைப்படங்கள் வைரலாகியது. இதனால் தனுஷ் அடுத்து எந்த மாதிரியான கதை களத்தையும் தோற்றத்தையும் வைத்து இந்த படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார் என்கிற ஆர்வம் ரசிகர் இடையே எழுந்தது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறது. விரைவில் இது குறித்த அடுத்த அப்டேட்டுகளை தனுஷ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையவை  காதலுடன் கடந்த 18 வருடங்கள்.! 19வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய கலா மாஸ்டர்.!

ராதிகா சரத்குமார் கட்டிய புது வீட்டின் கிரஹபிரவேசத்திற்கு வந்த தனுஷ்.! வெளியான புகைப்படங்கள்.! 3
வடசென்னையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் தனுஷ் சரத்குமார் கட்டியிருக்கும் புது வீட்டை பார்வையிடுவதற்காக சென்றிருக்கிறார். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் ராதிகா சரத்குமார் பகிர்ந்து இருக்கிறார். “திரைத்துறையில் இருக்கும் சிலளுடன் நெருக்கம் அதிகமாக இருக்கும் அதில் தனுஷும் ஒருவர் சரத்குமாரின் இல்ல பால் காய்ச்சி விழா” என்று அந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.!

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment