சக்தி திருமணத்தை நிறுத்த போராடும் ப்ரியா, காவியா.! பார்த்தி தந்தை எடுத்த விபரீத முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சக்தியின் திருமணத்தை நிறுத்த ஒரு புறம் பிரியாவும் காவியாவும் மாப்பிள்ளை வீட்டாரிடம் சென்று பேசிக்கொண்டு இருக்கின்றனர். மறுபுறம் அர்ஜுனனின் திருமணத்தை நிறுத்த பார்த்தியும் ஜீவாவும் அவரது தந்தையிடம் சென்று பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த இரண்டுமே கைகூடாமல் போயிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் வேறு நபருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சக்தி திருமணத்தை நிறுத்த போராடும் ப்ரியா, காவியா.! பார்த்தி தந்தை எடுத்த விபரீத முடிவு 1
ஈரமான ரோஜாவே சீரியலில் சக்தி அர்ஜுனை காதலிக்கும் விஷயத்தை தனது சகோதரிகளிடம் போட்டு உடைத்து இருக்கிறார். ஏற்கனவே தனது சகோதரிகள் அர்ஜுனின் அண்ணன்களை திருமணம் செய்திருக்கும் நிலையில் தானும் அர்ஜுனை காதலித்து வரும் விஷயத்தை கூறியிருக்கிறார். இதனால் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று பிரியா மற்றும் காவியா இருவரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் சென்று சொல்கின்றனர். ஆனால் திருமணத்தை நிறுத்த முடியாது என்று சக்தியை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து மேடையில் அமர வைக்கின்றனர். மறுபுறம் பார்த்திபனும் ஜீவாவும் திருமணத்தை நிறுத்த சொல்ல இந்த திருமணம் நடக்காவிட்டால் நானும் மஞ்சுளாவும் இறந்து விடுவோம் என்று பார்த்தியின் தந்தை கூறுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  'மீனாட்சி பொண்ணுங்க' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சண்டை.! அடித்துக்கொண்ட நடிகைகள்.!

சக்தி திருமணத்தை நிறுத்த போராடும் ப்ரியா, காவியா.! பார்த்தி தந்தை எடுத்த விபரீத முடிவு 3
இதற்கிடையில் சக்தியும் அர்ஜுனும் திருமண மேடையில் வந்த அமர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு வேறு நபருடன் திருமணம் நடக்குமா? அல்லது இந்த திருமணம் நின்று அவர்கள் காதலித்த நபர்களுடன் திருமணம் நடக்குமா? என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment