சீயான் விக்ரம் நடிக்கும் ‘கர்ணா’ படத்தின் டீசர் வெளியானது.! வீடியோ உள்ளே.!

நடிகர் சீயான் விக்ரம் கர்ணனாக நடித்து வரும் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படத்தை மீண்டும் தற்போது தூசி தட்டி எடுத்துள்ளனர். திடீரென இந்த படத்தின் டீசர் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சீயான் விக்ரம். இவர் கடைசியாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து பலரின் மனங்களை கொள்ளை கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்போது விக்ரம் கைவசம் ‘தங்கலான்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீயான் விக்ரம் நடிக்கும் 'கர்ணா' படத்தின் டீசர் வெளியானது.! வீடியோ உள்ளே.! 1
சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இரு படங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒன்று ‘கர்ணா’. மற்றொன்று ‘துருவ நட்சத்திரம்’. துருவ நட்சத்திரம் திரைப்படம் தற்போது வேகம் எடுத்து பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக 2017ம் ஆண்டு ஆர் எஸ் விமல் இயக்கத்தில் தயாரான திரைப்படம் தான் ‘கர்ணா’. இதன் ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில் சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த படத்தில் இருந்து டீசரை படக் குழுவினர் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  "அடுத்தடுத்த ஐ.டி. ரைட்"!!"கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்"

சீயான் விக்ரம் நடிக்கும் 'கர்ணா' படத்தின் டீசர் வெளியானது.! வீடியோ உள்ளே.! 3

மகாபாரதத்தில் வரும் கர்ணனாக சீயான் விக்ரம் நடிக்கும் இந்த கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கிறார். யுனைடெட் ஃபிலிம் கிங்க்டம் சார்பில் சூரிய புத்திர கர்ணன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஆர் எஸ் விமல் இயக்கியிருக்கிறார் இந்த படத்தின் டீசரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Mishri Movies

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment