நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது இணையத்தில் பூதாகரமாகி இருக்கும் நிலையில் தற்போது திரைப்பட விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் அதற்கு எதிர்வினை ஆற்றி இருக்கிறார்் இணையத்தில் வைரல் நாயகனாக வலம் வருபவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்திருந்தார். அந்த படத்தின் கதாநாயகியான திரிஷா பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதில், “‘லியோ’ படத்தில் திரிஷாவுடன் நடிக்கிறேன் என்றதும் நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும் என நினைத்தேன். நடிகை குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி திரிஷாவையும் தூக்கிப் போடலாம் என்று நினைத்தேன்” என்று அருவருக்கத்தக்க வகையில் பேசினார்.

அவரின் இந்தப் பேச்சு இணையத்தில் பெரும் வைரலானது. இதற்கு நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், நடிகைகள் குஷ்பூ, எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து த்ரிஷா குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க விட்டால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கும் முடிவை எடுக்க வேண்டி வரும் என்று சொல்லி தென்னிந்திய நடிகர் சங்கமும் எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது ப்ளூ சட்டை மாறன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “மன்சூர் அலிகான் பேசியதற்கு நடிகைகள் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர்களில் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் போன்ற சிலர் மட்டுமே பேசி உள்ளனர். முன்னணி நடிகர்கள் மற்றும் சீனியர் இயக்குனர்கள் அனைவரும் வாயில் கொழுக்கட்டையை வைத்துள்ளனர். இவர்களுடன் பல படங்களில் திரிஷா நடித்துள்ளார். ஆனால் ஒருவரும் வாய் திறக்கவில்லை. படத்தில் மட்டுமே பெண்களுக்காக புரட்சி வசனம் பேசுவார்கள் இந்த ஹீரோக்கள். சீனியர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இன்னும் சுத்தம். உங்களுக்கெல்லாம் எதுக்கு மீசை? என்று சொல்லி காட்டுமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவை பலரும் வரவேற்று வருகின்றனர்.!
த்ரிஷா குறித்து மன்சூர் பேசியதற்கு நடிககைகள் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளனர்
இயக்குனர்களில் கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் போன்றோர் மட்டுமே பேசியுள்ளனர்.
முன்னணி நடிகர்கள் மற்றும் சீனியர் இயக்குனர்கள் அனைவரும் வாயில் கொழுக்கட்டையை வைத்துள்ளனர்.
இவர்களுடன் பல படங்களில் த்ரிஷா…
— Blue Sattai Maran (@tamiltalkies) November 19, 2023
Twitter Original Source From: Blue Sattai Maran