“என்ன மன்னிச்சிடுங்க அண்ணா..!” வீடியோ வெளியிட்டு கதறி அழுத விஷால்.!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று நுரையீரல் அழற்சியால் எதிர்பாராத விதமாக காலமானார் அவரின் இந்த மறைவு தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தங்கள் வீட்டில் ஒருவராக பார்த்த மனிதர் இன்று காலமாகி விட்டாரே என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 80 மற்றும் 90களில் ரஜினி, கமல் என இருப்பது துருவங்கள் கோலொச்சிய நிலையில் தனக்கென தனி அடையாளத்துடன் படங்களில் நடிக்கத் தொடங்கியவர் விஜயகாந்த். விஜயராஜ் என்கிற தனது பெயரை திரைப்படத்திற்காக விஜயகாந்த் மாற்றிக் கொண்டார். திரைத்துறையில் பல ஆண்டுகளாக வெற்றியாளாராக வலம் வந்த அவர், அரசியல் களத்திலும் சாதனையாளராக வலம் வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"என்ன மன்னிச்சிடுங்க அண்ணா..!" வீடியோ வெளியிட்டு கதறி அழுத விஷால்.! 1

விளம்பரம்

2005ம் ஆண்டு தேமுதிக என்கிற கட்சியை தொடங்கிய அவர் முதல் தேர்தலில் 10% வாக்குகளைப் பெற்று, திமுக, அதிமுக என்கிற இரு பெரும் அரசியல் கட்சிகளை அதிர வைத்தார். பின்னர் 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். ஆனால் அப்போது ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இவரது கட்சி உடையத் தொடங்கியது. தேமுதிக எம்எல்ஏக்கள் பலரும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவின் தங்களை இணைத்துக் கொண்டனர். நம்பிக்கை துரோகங்களால் பெருமளவில் மனமுடைந்து போனார் விஜயகாந்த். அதன் பின்னர் வந்த ஒரு தேர்தலில் கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை. தொடர்ந்து அவரது உடல் நலமும் மிகவும் குன்றிப் போனது.

தொடர்புடையவை  லவ் யூ டி பொண்டாட்டி.! சினேகாவை உருகி உருகி காதல் செய்யும் பிரசன்னா.! அழகிய புகைப்படங்களை வெளியிட்ட பிரசன்னா.!

"என்ன மன்னிச்சிடுங்க அண்ணா..!" வீடியோ வெளியிட்டு கதறி அழுத விஷால்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வழக்கமான பரிசோதனை என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உதவி செய்யப்பட்டிருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடர்ந்து வருவதாகவும் தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. தேமுதிக அறிக்கையை வெளியிட்ட சில மணி நேரங்களில் அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. பலரும் விஜயகாந்த் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விஷால் தற்போது கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். “இந்த நேரத்தில் உங்கள் அருகில் இல்லாமல் போய் விட்டேனே..! என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா” என்று அவர் கண்ணீருடன் அந்த வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்..! நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment