‘இலக்கியா’ சீரியலில் இருந்து விலக உண்மையான காரணம் இதுதான்.! உண்மைகளை உடைந்த பிந்து.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் ஹீமா பிந்து தற்போது சீரியலில் இருந்து வெளியேறி விட்டதற்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார். கனத்த இதயத்துடன் இந்த சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் சன் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட சீரியல் தான் ‘இலக்கியா’. இந்த சீரியலில் ஹீரோவாக நந்தன் லோகநாதன் நடிக்க, ஹீரோயினாக ஹீமா பிந்து நடித்து வந்தார். நந்தன் லோகநாதன் ஏற்கனவே ‘லக்ஷ்மி’ என்கிற குறும்படத்தில் நடித்த பிரபலமானவர். பின்னர் சித்தி பாகம் இரண்டிலும் நடித்தார். இதேபோல ஹிமா பிந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே’ சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமானார்.

'இலக்கியா' சீரியலில் இருந்து விலக உண்மையான காரணம் இதுதான்.! உண்மைகளை உடைந்த பிந்து.! 1
‘இதயத்தை திருடாதே’ சீரியலுக்குப் பின்னர் ‘இலக்கியா’ சீரியலுக்கு வந்த அவர் ஒரு வருட காலத்திற்கு பின்னர் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கும் அவர், “என்னுடைய சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கனத்த இதயத்துடன் இந்த சீரியலை விட்டு விலக முடிவு எடுத்து இருக்கிறேன். என்னுடைய முடிவு உங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்குமானால், அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எனக்காக வருத்தப்பட வேண்டாம். என்னையும் மீறிய சில காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளால் இந்த சீரியலை விட்டு நான் விலக நேர்ந்துள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  இதுக்கு அந்த மாதிரி இருந்துட்டு போய்டலாம்.! டைமிங் பார்த்து விக்ரமனை தாக்கிய பிக்பாஸ் தனலட்சுமி.!

'இலக்கியா' சீரியலில் இருந்து விலக உண்மையான காரணம் இதுதான்.! உண்மைகளை உடைந்த பிந்து.! 3
சினிமாவையும் சீரியலையும் பேலன்ஸ் செய்வது மிக கஷ்டமாக இருக்கிறது. இது எனக்கு மட்டுமல்ல ‘இலக்கியா’ சீரியலில் நடிக்கும் சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் பொருந்தும். இது தேவையில்லாத மன அழுத்தத்தையும் பிரஷரையும் ஏற்படுத்தியது. என்னால் இந்த சீரியலுக்கு தொந்தரவு வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் சீரியல் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அதற்காக நான் இந்த சீரியலை விட்டு விலகுகிறேன். இந்த வெற்றிகரமான சீரியலில் நானும் ஒரு பங்காக இருந்தது எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு கொடுத்த அன்பின் ஆதரவையும் இனிவரும் நடிகர்களுக்கும் கொடுங்கள். என்னுடைய இந்த முடிவிற்கு பக்கபலமாக இருந்ததற்கு நன்றி. அன்புடன் பிந்து” என பகிர்ந்திருக்கிறார்.

'இலக்கியா' சீரியலில் இருந்து விலக உண்மையான காரணம் இதுதான்.! உண்மைகளை உடைந்த பிந்து.! 5
பிந்து சீரியலில் இருந்து விலகி விட்டதால் ‘கண்மணி’ சீரியல் நடித்து பிரபலமான சாம்பவி இனி ‘இலக்கியா’ சீரியலில் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. விரைவில் புது இலக்கியாவுடன் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment