சீசன் முடியப் போகும் சமயத்தில் டாஸ்க்குகளை கொடுக்கும் பிக்பாஸ்.! இதெல்லாம் தேவை இல்லாத ஆணி.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டங்களை நெருங்கி இருக்கிறது. அந்த வகையில் இன்று 94வது நாளுக்கான ப்ரோமோக்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் இத்தனை நாட்களாக டாஸ்க் எதுவும் வைக்காமல் இருந்த பிக்பாஸ், நிகழ்ச்சி முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் புதிய புதிய டாஸ்க்குகளை வைத்து வருகிறார். இதை ரசிகர்கள் கடுமையாக கேலி செய்து வருகின்றனர். 23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கின்றனர். இன்னும் இரண்டு வார காலமே மீதம் இருப்பதால் எண்ணிக்கையை குறைக்க பிக் பாஸ் அதிரடி திட்டங்களை தீட்டி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீசன் முடியப் போகும் சமயத்தில் டாஸ்க்குகளை கொடுக்கும் பிக்பாஸ்.! இதெல்லாம் தேவை இல்லாத ஆணி.! 1
இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. பணத்தின் மதிப்பு நிமிடத்திற்கு நிமிடம் ஏறிக்கொண்டே இருக்கிறது. ஒரு லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மதிப்பு, தற்போது ஒன்பது லட்சம் வரை ஏறி இருக்கிறது. ஆனால் போட்டியாளர்கள் யாருமே பணப்பெட்டியை எடுப்பதாக தெரியவில்லை. எனவே பிக் பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். பணப்பெட்டியை ஒரு வேளை யாரும் எடுக்கவில்லை என்றால் பணத்தின் மதிப்பு ஏறலாம் அல்லது இறங்கலாம் என்று அதிரடியாக அறிவிக்கிறார். இதனால் போட்டியாளர்கள் பலரும் பெட்டியை எடுப்பதா? வேண்டாமா? என்கிற குழப்பத்திலேயே இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜீ தமிழில் நடிகர் சிபு சூர்யன், வைஷ்ணவி நடிக்கும் புது தொடர்.! 'வீரா' ப்ரோமோ வெளியானது.!

சீசன் முடியப் போகும் சமயத்தில் டாஸ்க்குகளை கொடுக்கும் பிக்பாஸ்.! இதெல்லாம் தேவை இல்லாத ஆணி.! 3
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிக் பாஸ் புதுப்புது டாஸ்க்குகளை வைக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இத்தனை நாட்களாக எந்த சுவாரஸ்யமான டாஸ்க்குகளும் இல்லாமல், ஒருவர் ஒருவர் ஆங்காங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போல காட்டிவிட்டு, சீசன் முடியும் தருவாயில் இருக்கும்போது சுவாரஸ்யமான டாஸ்க்குகளை வைக்கிறீர்களே? என்று பிக்பாஸிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment