“சாண்டியை வாழ விடுங்க யா” கோபத்தில் கொந்தளித்த நடிகை காஜல் பசுபதி.! இதுதான் காரணமா?

டான்ஸ் மாஸ்டர் சாண்டியை வாழவிடுமாறு அவரது மூத்த மனைவி காஜல் பசுபதி தற்போது வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் காஜல் பசுபதி. இவர் அந்த நிகழ்ச்சியில் கோரியோகிராபராக பணியாற்றிய சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்படவே அவரை விவாகரத்து செய்துவிட்டு, 2017ம் ஆண்டு சில்வியா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் சாண்டி. இவருக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்த நிலையில் சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

"சாண்டியை வாழ விடுங்க யா" கோபத்தில் கொந்தளித்த நடிகை காஜல் பசுபதி.! இதுதான் காரணமா? 1
திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “தனக்கு இரண்டாம் திருமணம் முடிந்து விட்டதாகவும், அவசரமாக முடிவெடுத்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை” என்று அவர் கூறியிருந்தார். ஆனால் இது பழைய புகைப்படம் என்றும் பொய் சொல்லாதீர்கள் என்றும் ரசிகர்கள் கமெண்ட்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அதையெல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் சாண்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சாண்டியின் முதல் மனைவி காஜலுக்கு இரண்டாவது திருமணம் ஆகிவிட்டது என்று பலரும் செய்திகளை பரப்பி வந்தனர். இதை பார்த்த காஜல் பசுபதி அனைத்திலும் சாண்டியின் புகைப்படம் பயன்படுத்துவதை விமர்சித்திருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  திருச்சியில் சூப்பர் வீடு கட்டி வரும் அறந்தாங்கி நிஷா.! வீடை சுற்றி காண்பித்து ஹோம் டூர் வீடியோ.!

"சாண்டியை வாழ விடுங்க யா" கோபத்தில் கொந்தளித்த நடிகை காஜல் பசுபதி.! இதுதான் காரணமா? 3
“என்னயா அதுக்குள்ள முடிந்த செகண்ட் மேரேஜ் எனும் போட்டு இருக்க, இன்னும் நான் ஸ்டார்ட் பண்ணவே இல்ல ஜோக்குகளை ஒதுக்கி விடுங்கள், எதுக்குயா எல்லாத்துக்கும் அவன்(சாண்டி) புகைப்படத்தை பயன்படுத்துறீங்க? அவனை வாழ விடுங்கள்” என்று சொல்லி பகிர்ந்து இருக்கிறார். பொதுவாக காஜல் பற்றி செய்திகளில் சாண்டியின் முன்னாள் மனைவி என்று சொல்லி சாண்டியின் புகைப்படத்தை பயன்படுத்துவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதை குறிப்பிட்டு தான் தற்போது காஜல் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment