மனோஜுக்கு சரக்கை ஊற்றி விட்ட பிரவுன் மணி.! போதை தலைக்கேறி உளறித் தள்ளும் ரோகிணி மாமா.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரோகிணியின் மாமாவாக நடித்துக் கொண்டிருக்கும் பிரவுன் மணிக்கு சரக்கை ஊற்றி கொடுத்து உண்மைகளை வரவழைக்க முத்துவும், அவரது நண்பரும் முயன்று கொண்டிருக்கின்றனர். பிரவுன் மணி உண்மைகளை கூறுவாரா? ரோகிணி முத்துவிடம் கையும் களவுமாக மாட்டுவாரா? என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்திருக்கிறது. விஜய் டிவி மட்டுமல்லாமல் சின்னத்திரை உலகிலும் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘சிறகடிக்க ஆசை’. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனோஜுக்கு சரக்கை ஊற்றி விட்ட பிரவுன் மணி.! போதை தலைக்கேறி உளறித் தள்ளும் ரோகிணி மாமா.! 1
இந்த சீரியலின் கதைப்படி தற்போது அனைவரும் பொங்கலுக்காக பாட்டியின் சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர். அங்கு ரோகிணி பிரவுன் மணி என்பவரை ஏற்பாடு செய்து தன்னுடைய மாமாவாக நடிக்குமாறு அழைத்து வந்துள்ளார். கறிக்கடையில் வேலை பார்த்து வரும் பிரவுன் மணி எப்போதும் ஆடு வெட்டுவது பற்றிய பேசிக் கொண்டிருப்பதால் அனைவருக்கும் அவர் மீது சந்தேகம் எழுகிறது. இதனால் முத்து அவரை தனியாக அழைத்துச் சென்று உண்மைகளை எப்படியாவது கறந்து விட வேண்டும் என்று திட்டம் திட்டிக் கொண்டிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  Week End-ஐ Outing சென்று கொண்டாடும் பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி..!வைரலாகும் செம்ம கியூட்டான புகைப்படங்கள்..!

மனோஜுக்கு சரக்கை ஊற்றி விட்ட பிரவுன் மணி.! போதை தலைக்கேறி உளறித் தள்ளும் ரோகிணி மாமா.! 3
அதேபோல பிரவுன் மணியை அழைத்துக்கொண்டு செல்லும் அவர்கள் அவருக்கு சாராயம் வாங்கி கொடுத்து அதை குடிக்க செய்கின்றனர். பிரவுன் மணி மனோஜ்க்கும் சாராயத்தை ஊற்றி விடுகிறார். பின்னர் தன்னுடைய ஊர் பற்றியும், தன்னுடைய உண்மையான பெயர் பற்றியும் பிரவுன் மணி உண்மைகளை கூற முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அப்போது போதை தலைக்கேறி அவர் சுருண்டு விழுகிறார். இதனால் இப்போதைக்கு ரோகிணி முத்துவிடம் மாட்ட மாட்டார் என்று தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment