கோத்தகிரியில் உள்ள நடிகை விஜி சந்திரசேகர் வீட்டுக்கு விசிட் அடித்த கலா மாஸ்டர்.! Home Tour வீடியோ.!

நடிகை விஜி சந்திரசேகர் அவர்களின் கோத்தகிரியில் அமைந்துள்ள வீட்டிற்கு கலா மாஸ்டர் நேரில் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டை விஜி சுற்றி காண்பித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் வெளியான ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிகாந்தின் சகோதரியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் விஜி சந்திரசேகர். இந்தப் படத்திற்குப் பின்னர் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் அவர் ‘கிழக்குச் சீமையிலே, ‘இந்திரா’ போன்ற படங்களில் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரியில் உள்ள நடிகை விஜி சந்திரசேகர் வீட்டுக்கு விசிட் அடித்த கலா மாஸ்டர்.! Home Tour வீடியோ.! 1

விளம்பரம்

90களுக்கு பின்னர் நடிப்பை நிறுத்திய அவர், 2001ம் ஆண்டு வெளியான ‘பார்த்தாலே பரவசம்’ படத்தின் மூலமாக மீண்டும் திரைத்துறைக்கு திரும்பினார். பின்னர் ‘ஆயுத எழுத்து’, ‘ஆரோகணம்’, ‘மதயானைக் கூட்டம்’ ‘வெற்றிவேல், காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கைவசம் பெயரிடப்படாத மூன்று படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  எனக்கு பணம் என்ப முக்கியமே இல்லை!-நடிகை டாப்சி!!

கோத்தகிரியில் உள்ள நடிகை விஜி சந்திரசேகர் வீட்டுக்கு விசிட் அடித்த கலா மாஸ்டர்.! Home Tour வீடியோ.! 3

விளம்பரம்

இது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பந்தம்’ ‘ரேவதி’ போன்ற படம் நாடகங்களிலும், பின்னர் ‘அலைகள்’, ‘அண்ணாமலை’, ‘கோலங்கள்’, ‘அழகி’, ‘சந்திரகுமாரி’ போன்ற பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் தனது மூத்த மகளுக்கு திருமணத்தை நடத்தி முடித்து இருந்தார். இந்த நிலையில் கோத்தகிரியில் இருக்கும் அவரது வீட்டுக்கு கலா மாஸ்டர் விசிட் அடித்துள்ளார். அந்த ஹோம் டூர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Kala Flix

விளம்பரம்

Leave a Comment