ஜாலியாக குத்தாட்டம் போடும் ஜெயம் ரவி.! ‘சைரன்’ படத்திலிருந்து “அடி ஆத்தி..” பாடல் வெளியானது.!

நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைரன்’ திரைப்படத்தின் “அடி ஆத்தி..” என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. தந்தை மற்றும் மகளுக்கு இடையே இருக்கும் பாசத்தை மையப்படுத்தி இந்த பாடல் உருவாகி இருக்கிறது. இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜாலியாக குத்தாட்டம் போடும் ஜெயம் ரவி.! 'சைரன்' படத்திலிருந்து "அடி ஆத்தி.." பாடல் வெளியானது.! 1
ஜெயம் ரவியின் மாமியாரான சுஜாதாவின் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படம் தான் ‘சைரன்’. இந்த திரைப்படம் வருகிற 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இந்த படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். படம் வெளியாக இன்னும் மூன்று தினங்களே இருக்கும் நிலையில், படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் ட்ரெய்லர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது “அடி ஆத்தி..” என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  BiggBoss ஷாரீக் திருமண கொண்டாட்டம் கோலாகலமாக துவக்கம்...! பிரம்மாண்டமாக நடைபெற்ற Haldi நிகழ்ச்சி..!

ஜாலியாக குத்தாட்டம் போடும் ஜெயம் ரவி.! 'சைரன்' படத்திலிருந்து "அடி ஆத்தி.." பாடல் வெளியானது.! 3

இந்தப் பாடலை அந்தோணி தாசன் மற்றும் சிந்துரி விஷால் ஆகியோர் இணைந்து பாடி இருக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘சைரன் படத்தின் “அடி ஆத்தி..” பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sony Music South

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment