தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான டேனியல் பாலாஜி நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இழப்பு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாக அமைந்துள்ளது. இந்த நிலையில் அவர் தனது தாயாரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னையில் கோவில் ஒன்றைக் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி இருந்தார். அந்த கோவில் கும்பாபிஷேகத்தின் போது வர்ணம் பூசும் வேலையை அவரே பார்த்திருக்கிறார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டேனியல் பாலாஜி 2000ம் ஆண்டு வெளியான ‘சித்தி’ என்கிற நாடகத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நாடகத்தில் டேனியல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததால் இவர் டேனியல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார் டேனியல் பாலாஜி. மேலும் இவர் நடிகர் முரளிக்கு நெருங்கிய உறவினர் ஆவார். . கமலஹாசன் நடித்து வெளிவராத ‘மருதநாயகம்’ படத்தில் யூனிட் ப்ரொடக்ஷன் மேனேஜராக பாலாஜி தனது வெள்ளித்திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

தமிழில் அவரது முதல் படம் ‘ஏப்ரல் மாதத்தில்’. அதைத் தொடர்ந்து ‘காதல் கொண்டேன்’, ‘காக்க காக்க’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். ‘காக்க காக்க’ படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக சூர்யாவுடன் நடித்தார். பின்னர் தொடர்ந்து ‘வேட்டையாடு விளையாடு’, ‘பொல்லாதவன்’, எ’ன்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘பைரவா’, ‘இப்படை வெல்லும்’, ‘வடசென்னை’, ‘பிகில்’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார் டேனியல் பாலாஜி.

கடைசியாக தனுசுடன் ‘கேப்டன் மில்லர்’ என்கிற படத்திலும் நடித்து இருந்தார். இந்த நிலையில் டேனியல் பாலாஜி ஒரு கோவிலுக்கு பெயிண்ட் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதன் பிண்ணனி குறித்து ஆராய்ந்த போது, அவர் தனது தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை ஆவடியில் அங்காளபரமேஸ்வரி ஆலயம் ஒன்றை கடந்த வருடம் மார்ச் மாதம் கட்டி முடித்து இருந்தார். இதை தனது சொந்த செலவில் அவர் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கோவிலை அவர் தனது தாயாரின் ஆசைக்காக கட்டியுள்ளார். இந்த நிலையில் அந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு அவர் பெயிண்ட் அடிக்கும் வீடியோ வைரலாகி இருந்தது. சென்னை ஆவடி பகுதியில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அவர் ஒன்றை கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. டேனியல் பாலாஜி நேற்று மறைந்ததையடுத்து அவர் கட்டிய ஆலயத்தின் கும்பாபிஷேக வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Infinite Talkies