விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராகிணிக்கும் அஜய்க்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த இடத்திற்கு திடீரென போலீசார் வருகை தந்து பசுபதியை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர் அதற்கு காரணமாக காவேரி கொடுத்த புகார் தான் காரணமாக கூறப்படுகிறது. தன்னை பசுபதி கடத்தி விட்டார் என காவேரி புகார் கொடுக்க, பசுபதியை போலீசார் கைது செய்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காவேரியின் தந்தையை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்துக் கொண்ட பசுபதி, காவேரியின் குடும்பத்தை வாழ விடாமல் செய்கிறார். காவேரிக்கு தற்போது விஜயின் அன்பு கிடைக்கிறது. அவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் அவருக்கு மீண்டும் குடைச்சல் கொடுப்பதற்காக, விஜயின் தம்பி அஜய்க்கு தனது மகள் ராணியை திருமணம் செய்து வைக்க பசுபதி ஏற்பாடுகளை நடத்தி வருகிறார். இந்த விஷயம் தெரிந்து கொண்ட காவேரியின் குடும்பம் மிகவும் வேதனைக்குள்ளாகிறது. இந்த நிலையில் இன்று அஜய் ராகிணி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அப்போது அங்கு வரும் போலீசார் பெண்ணை கடத்திய வழக்கில் உங்களை கைது செய்வதாக பசுபதியை இழுத்து செல்கின்றனர். யார் என் மீது புகார் கொடுத்தார்? என்று பசுபதி கேட்க, நான் தான் என காவேரி கூறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television