சின்னத்திரை உலகில் ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் வகிக்கும் விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் சீசன் 5 போட்டியாளர்கள் டிடிஎஃப் வாசனை காதலிப்பதாக தெரிவித்திருக்கிறார். கோவிட் சமயத்தில் இருந்து பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கி வருகிறது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. இதில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் வெள்ளி திரைக்கு சென்று கலக்கி வருகின்றனர். 4 சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் விடிவி கணேஷ், சுஜிதா தனுஷ், youtube இர்பான் என பல பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கி இருக்கின்றனர். இவருடன் கேரளாவை சேர்ந்த நடிகர் ஷாலினி சோையாகவும் பங்கேற்றிருக்கிறார் கடந்த சீசனில் வந்த சிருஷ்டி போலவே இவரது செயல்பாடுகளும், வெகுளியான பேச்சும் பலரையும் கவர்ந்திருக்கிறது. ‘கண்ணகி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு தற்போது ‘குக் வித் கோமாளி’ வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

இந்த நிலையில் யூடியூபில் சர்ச்சை பிரபலமாக விளம்பரம் டிடிஎஃப் வாசனின் காதலர் தான் இவர் என்று கூறப்படுகிறது. யூடியூப் சேனலில் பேசிய வாசன் மற்றும் ஷாலினியை தனது காதலி என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ஷாலினி பேசுகையில், “வாசனை இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என கூறியிருக்கிறேன். ஏனென்றால் புகழும் குரேஷியும் என் கன்னத்தை கிள்ளுவதை பார்த்தால் வாசன் கடுப்பாகிவிடுவார். வாசன் மட்டும் இல்லையென்றால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது” என்று பேசினார்.
Youtube Video Embed Code Credits: Twin Throttlers