தூய்மை இந்தியா திட்டத்தால் மனிதக்கழிவை மனிதனே அகற்றும் முறையை அதிகரிக்கும்: அறிக்கை

தூய்மை இந்தியா திட்டம் மூலம் கட்டப்படும் புதிய கழிப்பறைகள், கையால் மனித கழிவுகளை அகற்றும் முறையை உயர்த்தக்கூடும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

சமீப காலமாக மனித கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்கள் குறித்தான செய்திகள் நம்மை வந்து சேர்கின்றன. எந்த ஒரு பாதுகாப்பு உபகாரங்கள் இன்றி குழிக்குள் இறங்கும் இவர்கள், விச வாயு தாக்கி இறந்து போகிறார்கள். இதற்காக உலர கழிப்பகங்களில் மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பக கட்டுமான (தடை) சட்டம் 1993 கீழ், மனித கழிவுகளை கையால் அள்ளுவது தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ஜூலை 2019 அன்று அளித்த பதிலில் , 18 மாநிலங்களில் உள்ள 170 மாவட்டங்களில் 54,130 கையால் மனிதக்கழிவு அகற்றுவோர் உள்ளதாக தெரிவித்தது.

விளம்பரம்
தூய்மை இந்தியா திட்டத்தால் மனிதக்கழிவை மனிதனே அகற்றும் முறையை அதிகரிக்கும்: அறிக்கை 1

தூய்மை இந்தியா திட்டம் குறித்தான பிரச்சாரத்தில், இரட்டை குழி கொண்ட கழிப்பறை கட்டப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. இது மனிதனின் மலம் அள்ளும் தேவையை குறைக்குமென தெரிவிக்கப்பட்டது. ஆயினும் கட்டப்பட்டுள்ள கழிவறைகளில் 13 சதவிகிதங்களே குழி கழிப்பறை எனவும், 38% பேர் செப்டிக் தொட்டி முறையில் உள்ளதாகவும், 20 சதவிகிதத்திற்கு அதிகமான ஒற்றை குழி கழிப்பறைக்கு துப்புரவு தொழிலாளர்கள் தேவைப்படுவதாக பேக்ட்செக்கர்.இன் நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.

தொடர்புடையவை  வடமாநிலங்களில் நிலவும் பணி பொழிவு! பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து!!

இதுகுறித்து குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலாளர் பரமேஸ்வரன் கூறுகையில், சுமார் 85 சதவிகித கழிப்பறைகள் இரட்டை குழிகளை கொண்டாக இல்லை என இந்திய ஸ்பென்ட் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment