விஜய் டிவியில் இருந்து விலகி வேறு தொலைக்காட்சிக்கு சென்ற கேபி.! வெளியான ப்ரோமோ இதோ.!

விஜய் தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கேப்ரியல்லா நடிக்கும், புது சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செவன் சி என்கிற தொடரில் நடித்த பிரபலமானவர் கேப்ரியல்லா. அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் இருந்து விலகி வேறு தொலைக்காட்சிக்கு சென்ற கேபி.! வெளியான ப்ரோமோ இதோ.! 1

விளம்பரம்

ஆனால் அந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்த அளவிற்க்கு அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே 2’   சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த தொடரில் காவியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த தொடர் திடீரென ஒரு நாள் முடிவுக்கு வந்த நிலையில் கேப்ரியல்லா அடுத்து எந்த சீரியலில் நடிக்க இருக்கிறார்? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒரு நாள் கேபி விஜய் டிவியில் இருந்து விலகி சன் தொலைக்காட்சிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

தொடர்புடையவை  முடிவுக்கு வருகிறது பாரதி கண்ணம்மா.! கிளைமாக்ஸ் காட்சிகள் ஷூட்டிங்கை வெளியிட்ட வெண்பா.!

விஜய் டிவியில் இருந்து விலகி வேறு தொலைக்காட்சிக்கு சென்ற கேபி.! வெளியான ப்ரோமோ இதோ.! 3

விளம்பரம்

அதை தற்போது உறுதிப்படுத்தும் விதமாக புது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ‘மருமகள்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த புது தொடரில் கேபிரியல்லாவும், சன் டிவி பிரபலம் ராகுல் ரவியும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அதற்கான முதல் ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என கூறப்பட்டுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment