நான் போயிட்டா உன்னை யாரு பாத்துப்பா..! தனுஷின் ராயன் படத்தின் First Promo வெளியாகியது.!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் தனுஷ். தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிய இவர் தற்போது தெலுங்கு சினிமாவிலும் தனது வெற்றிக்கொடியை நட்டியுள்ளார் . இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் தனுஷ் இயக்குனர், பாடலாசிரியர் , பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

நான் போயிட்டா உன்னை யாரு பாத்துப்பா..! தனுஷின் ராயன் படத்தின் First Promo வெளியாகியது.! 1

விளம்பரம்

பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகிய இவர் தற்போது தனது 50வது படத்தையும் அவரே இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் என்ற பெயரில் உருவாகி உள்ள இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். சன் பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

நான் போயிட்டா உன்னை யாரு பாத்துப்பா..! தனுஷின் ராயன் படத்தின் First Promo வெளியாகியது.! 3

விளம்பரம்

வருகிற ஜூலை 26 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தினை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். பல திரையரங்குகளிலும் தற்போது முன்பதிவு தொடங்கி ஹவுஸ் புல் ஆகியுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தொடர்புடையவை  நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளரா!?

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

விளம்பரம்

Leave a Comment