மீண்டும் ஒன்றிணைந்த விடாமுயற்சி பட நடிகர்கள்..! பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித்குமார்..!

தமிழ் சினிமாவின் உயரம் தொட்ட நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தனது அசாத்தியமான நடிப்பால் பல லட்ச ரசிகர்களை தனது வசம் ஆக்கி இருக்கிறார் இவர். வலிமை படத்திற்கு பிறகு இவரது படங்கள் எதுவும் வெளியாகாததால் , ரசிகர்கள் அடுத்தப்படத்திற்காக ஆவலுடன் காத்து இருக்கின்றனர். லைக்கா தயாரிப்பில் மகிழ் இயக்கத்தில் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து உள்ளார்.

மீண்டும் ஒன்றிணைந்த விடாமுயற்சி பட நடிகர்கள்..! பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித்குமார்..! 1

விளம்பரம்

இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரெஜினா கேசன்ட்ரா, அர்ஜுன் , ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். தற்போது தொடர்ந்து படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வருகிறது. இதுவரை படத்தின் அறிவிப்பு தேதி வெளியாகாத நிலையில் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். தற்போது இப்படத்தை தீபாவளிக்கு எதிர்பார்த்து ரசிகர்கள் உள்ளனர்.

மீண்டும் ஒன்றிணைந்த விடாமுயற்சி பட நடிகர்கள்..! பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் அஜித்குமார்..! 3

விளம்பரம்

படப்பிடிப்பு அண்மையில் முடிந்த நிலையில், படத்தில் நடித்த நடிகர்கள் மீண்டும் ஒன்றிணைந்து உள்ளனர். நடிகர் அஜித்தும் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டு உள்ளார். இந்த புகைப்படங்களை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது அஜித் ரசிகர்களால் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment