நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். ஜெயிலர் படத்தின் மாபெரும் ஹிட்டுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு படத்திற்கு உள்ளது. ரசிகர்கள் இப்படத்தினை காண ஆவலுடன் காத்து உள்ளனர். ஜெயிலர் படத்தை போலவே இந்த படத்திலும் அமிதாப்பச்சன் , ராணா , ரித்திகா சிங் , மஞ்சு வாரியார் என பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

லைக்கா நிறுவன தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாகி இருக்கிறது.ஜெய் பீம் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் ஞானவேல் இப்படத்தினை இயக்கி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டு இருக்கிறது. இப்படம் அக்டொபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதே நாளில் நடிகர் சூர்யாவின் கங்குவா படமும் வெளியாக உள்ளது.

படம் வெளியாகும் தேதியை கூறிய உடனே படக்குழு அப்டேட்டுகளை கொடுக்கும் வேலைகளில் இறங்கி இருக்கிறது.தற்போது இப்படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடலை படக்குழு வெளியிட திட்டமிட்டு உள்ளது. விரைவில் இப்பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
Hunter dude 💥 is coming to blast your speakers! 🔊 The 1st Single from #Vettaiyan 🕶️ coming soon…! #Manasilayo ??? 🥁#வேட்டையன் 🕶️ @rajinikanth @tjgnan @anirudhofficial @SonyMusicSouth #Vettaiyan1stSingle #VettaiyanFromOct10 https://t.co/acEw3dTxf5
— Lyca Productions (@LycaProductions) August 20, 2024