நடிகர் சூரி தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகனாக உருவெடுத்து உள்ளார். காமெடியனாக இருந்த இவர் தற்போது முழுநேர கதாநாயகனாக மாறி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான விடுதலை மற்றும் கருடன் திரைப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்று உள்ளது. தற்போது இவரின் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் , இயக்குனர் வினோத் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. பின்னணி இசை இல்லாமல் உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல ஆதரவை அளித்து வருகின்றனர். தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் சூரி நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. மேக்கிங் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : SIVAKARTHIKEYAN PRODUCTIONS