தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் கார்த்தி. இயக்குனர் மணிரத்தினத்திடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்த இவர் தற்போது முன்னணி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் உருவெடுத்து உள்ளார். பருத்திவீரன் படத்தை தொடர்ந்து பையா, சிறுத்தை என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல புதிய இயக்குனர்களுடன் 15 படங்களுக்கு மேல் பணியாற்றிய ஒரே நடிகர் கார்த்தி. இவருக்கு அண்மையில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான ஜப்பான் படம் மாபெரும் தோல்வியை பெற்று கொடுத்தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனமாக நடித்து வருகிறார் கார்த்தி. தற்போது இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியாகி ஹிட் அடித்த படம் சர்தார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இவருக்கு அடுத்ததாக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் இவருடன் அரவிந்த் சாமி நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்து உள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இப்படத்தில் கமல் பாடிய யாரோ இவன் யாரோ என்ற பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.
Embed Video Credits : THINK MUSIC INDIA