80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைதான் மீனா. மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் தற்போது வரை மீனாவுக்கு இருக்கிறது. கண்ணழகி என்று கூறினால் உடனே நினைவுக்கு வருவது இவர் மட்டும்தான் . அப்படி பல வெற்றிப்படங்களை கொடுத்து தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இன்று முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள சினிமா வரை பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.

தற்போது இவரது மகளையும் தன்னை போல குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் எதிர்பாராத விதமாக கொரோனா தாக்குதலால் உயிரிழந்தார். இது மீனாவின் வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பி போட்டது. அதிலிருந்து மீண்டு வந்த மீனா தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது மீனா தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதற்காக தனது தோழிகளுடன் பார்ட்டி ஏற்பாடு செய்து உள்ளார். தோழிகள் அனைவரும் வந்து மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி உள்ளனர். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீனா பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் மீனாவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
