சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்தவர் காயத்ரி. சன்டிவியில் ஒளிபரப்பாகிய தென்றல் நாடகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கி இருக்கிறார் காயத்ரி யுவராஜ். இந்த சீரியலை தொடர்ந்து காயத்ரி, அழகி, பொன்னுஞ்சல், களத்துமேடு, மெல்லத்திறந்தது கதவு,போன்ற பல நாடகங்களில் நடித்து உள்ளார்.

பின்னர் 2016ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி சீசன் 3 நிகழ்ச்சியிலும் நடித்து இருக்கிறார். இந்த சீரியலை தொடர்ந்து, அரண்மனை கிளி , சித்தி 2, நாம் இருவர் நமக்கு இருவர், மீனாட்சி பொண்ணுங்க என தொடர்ந்து சீரியலில் நடித்து பிரபலமாகினார். நடனத்தின் மேல் அதிக விருப்பம் உள்ள இவர், நடனப்பள்ளியில் சேர்ந்து படிக்கும் பொழுது, யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு மகன் மற்றும் மகள் ஒருவர் உள்ளனர். தற்போது புதிய டான்ஸ் ஸ்டூடியோ திறந்து குழந்தைகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது மகளுடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. காயத்ரியை போலவே அவர் மகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
