தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் இவரது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த படம் தனி ஒருவன். இப்படத்திற்கு பிறகு தான் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கை முற்றிலும் மாறியது என்று சொல்லலாம். அந்தளவுக்கு தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்து இருந்தார். இந்த படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமிக்கும் இப்படம் மிகப்பெரிய கம் பேக்கை தமிழ் சினிமாவில் கொடுத்தது என்றும் சொல்லலாம்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் தனி ஒருவன் 2 படத்தின் அப்டேட் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்டேட் வெளியாகி ஓராண்டுகளை கடந்து படத்தை இன்னும் ஆரம்பிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர் படக்குழுவினர். இந்நிலையில் அண்மையில் ஜெயம் ரவியிடம் இதுகுறித்து கேட்ட பொழுது,

தனி ஒருவன் படம் தற்போது பிராசசிங்கில் இருப்பதாக தெரிவித்து உள்ளார். அந்த பிராசஸ் தற்போது மெதுவாக நடந்து வருவதாகவும், அந்த படம் குறித்து அப்டேட்டுகளை கொடுக்க தானும் ஆவலுடன் காத்து இருப்பதாகவும், விரைவில் இப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ஜெயம் ரவி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.