தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சிம்பு. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார். சமீபகாலமாக இவரது படங்கள் சரியான வரவேற்பினை பெறாத நிலையில், படங்களில் நடிப்பதையும் சிம்பு முழுவதும் தவிர்த்தார். தற்போது ரசிகர்களுக்காக மீண்டும் பழைய சிம்புவாக என்ட்ரி கொடுத்து உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் நடந்து முடிந்து இருக்கிறது.

இந்நிலையில் சிம்புவின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. நடிகர் சிம்பு இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் , ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய மகிழ்ச்சியில் உள்ளனர்.
Extremely happy to associate with our prestigious @Ags_production & My dear fan, the talented and youthful director @Dir_Ashwath for a terrific entertainer ❤🔥
Kattam Katti Kalakrom 🔥#VintageSTRmood #AGS27
#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh… pic.twitter.com/c9BSMTll0c— Silambarasan TR (@SilambarasanTR_) October 21, 2024