நடிகர் கவினின் ப்ளடி பெக்கர் படத்தின் வீடியோ பாடல் வெளியாகியது..!

பிக் பாஸ் மூலம் பிரபலமாகியவர் நடிகர் கவின். தொடக்கத்தில் சின்னத்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக ஜொலித்து வருகிறார். இவர் சினிமா வாழ்க்கையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் இவர் நடித்த லிப்ட் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கவினின் ப்ளடி பெக்கர் படத்தின் வீடியோ பாடல் வெளியாகியது..! 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த டாடா படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது . தொடர்ந்து படங்களை கொடுத்து சினிமாவில் நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார் கவின். இவருக்கு அடுத்ததாக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் பிளாடி பெக்கர் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து உள்ளார்.

நடிகர் கவினின் ப்ளடி பெக்கர் படத்தின் வீடியோ பாடல் வெளியாகியது..! 3

விளம்பரம்

அண்மையில் வெளியாகிய இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கி இருக்கிறது. இப்படத்தின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது.பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் கவினிற்கு இப்படம் வெற்றிபெற வேண்டும் என அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  ஹாலிவுட் படம் பாத்த மாதிரி இருக்கு.. படத்தை பற்றி பேசும் போது கண்ணீர் விட்ட ரசிகர்கள் | Valimai

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

விளம்பரம்

Leave a Comment