கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உள்நாட்டு வாகன விற்பனை சரிந்துள்ளது. இதனால் 2019ஆம் ஆண்டில் வாகன துறையில் மிக மோசமான விற்பனை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

மக்களிடம் நுகர்வு கலாசாரம் குறைந்து வருவதாலும், குறைந்து போன முதலீடு தன்மை, வங்கி சாரா நிதி துறைகளில் ஏற்பட்டு வரும் குழப்பமான சூழல் காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 5 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வாகன விற்பனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 16.17 இலட்சமாக இருந்தது. ஆனால் தற்போது அது 14.05 இலட்சமாக குறைந்துள்ளது.
அதேபோல இந்த ஆண்டு 2முழுவதும் .3 கோடி வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது, இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 13 சதவிகிதம் குறைவாகும்.
கடந்த ஆண்டு 2.60 கோடி வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. இதனால் கடந்த 22 வருடங்களில் இல்லாத அளவிற்கு வாகன விற்பனை குறைந்து, உற்பத்தி நிறுவனங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.