தமிழ் சினிமா திரை உலகம் புதுப்புது வித்தியாசங்களை காண்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகம் புது மைல்களை எட்டி இருக்கிறது. சமீபத்தில் தான் தமிழ் திரை உலகின் நூற்றாண்டு விழாக்கள் கூட கொண்டாடப்பட்டது. மேலும் பல படங்களுக்கு முன்மாதிரியாகவும் தமிழ் திரையுலகம் விளங்கி வருகிறது. தமிழ் திரை உலகில் நடிகர்களாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமலஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு பல கோடியில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்திய சினிமாவுக்கே முன்னோடியாக இருக்கும் தமிழ் சினிமாவில் தற்போது புதுவிதமாக ஒரு படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் தான் “பிகினிங்” (Beginning). இந்த படத்தை ஜெகன் விஜயா என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் வினோத் கிஷன், கௌரி கிஷன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் இணைந்து சச்சின், ரோகினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். முன்னணி இயக்குனராக இருக்கும் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் மற்றும் லெப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் ஆக இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. ஆசியாவிலேயே முதல் முறையாக ஸ்ப்லிட்டு ஸ்கிரீன் எனப்படும் இரண்டு கதைகளை ஒரே திரையில் காட்டும் டெக்னிக்கல் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் திரையின் வலது பக்கம் ஒரு கதையும், இடது பக்கம் ஒரு கதையும் ஓடிக்கொண்டிருக்கும். ஒரே சமயத்தில் இந்த இரண்டு கதைகளும் நடக்கும். இரண்டு மாறுபட்ட நிகழ்வுகளை ஒரே சமயத்தில் பார்ப்பது புதுவகையான அனுபவத்தை கொடுக்கும். திரில்லர் கதைக்களமாக இந்த கதைக்களம் உருவாகியிருக்கிறது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆசியாவிலேயே முதல் முயற்சியாக இந்த படம் உருவாகி இருப்பது வரவேற்பு பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புது விதமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, நீங்களும் அந்த ட்ரைலரை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Divo Music