விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சின்ன மருமகள். இந்த தொடருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பல ரசிகர்களின் ஆதரவுடன் சின்னமருமகள் தொடர் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரஸ்யம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ரோமோவில் , சேது அப்பா ஜெயிலுக்கு போக தமிழ் செல்வி தான் காரணம் என்ற உண்மை வெளி வருகிறது. ஈஸ்வரி தமிழ் செல்வியை பழிவாங்க காத்துகொண்டு இருந்த நிலையில் சரியான நேரம் அமைந்தது. தற்போது உண்மை தெரிந்த உடனே சேது அருவாளை எடுத்துக்கொண்டு தமிழ் செல்வி பக்கம் ஓடுகிறார் . அவரை அனைவரும் தடுக்க செல்கின்றனர்.

இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சிலர், இது கனவு என கூறி வருகின்றனர். கனவு என்பது தெளிவாக தெரிவதாகவும் இது ஏமாற்றுவேலை என்பது போல ரசிகர்கள் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தொடரின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION