மொய் விருந்தில் மொக்கை வாங்கிய மருமகள்கள்.! கோபத்தில் அடித்து உடைத்த கதிர்.! ப்ரோமோ இதோ.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது குப்பை அள்ளும் வண்டியில் சென்று கொண்டிருக்கும் நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி, சக்தி, ஞானம் மற்றும் குழந்தைகளை பின்தொடர்ந்து கரிகாலன் வந்து கொண்டிருக்கிறார். அவர் தனது ஃபோனில் அவர்களை வீடியோ எடுத்துக் கொண்டே செல்கிறார். இதனால் நந்தினி கரிகாலன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மொய் விருந்தில் மொக்கை வாங்கிய மருமகள்கள்.! கோபத்தில் அடித்து உடைத்த கதிர்.! ப்ரோமோ இதோ.! 1

விளம்பரம்

கதிர் மகள் தாராவின் மொய் விருந்து ஏற்பாடுகள் ஜோராக நடந்து வருகிறது. ஆனால் அதில் பல பிரச்சனைகள் வருகிறது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த கோயிலில் கறி சமைக்க கூடாது என கூறிவிட்டதால் பிரச்சனை வெடிக்கிறது. இதனால் கதிர் மிகுந்த கோபத்தில் நந்தினியின் தந்தையை கத்திக் கொண்டிருக்கிறார் அதே சமயம் காரை அனுப்பி தாராவை வரச் சொல்லிய நிலையில், கார் கிடைக்காததால் குப்பை அள்ளும் டிராக்டரை அனுப்பி இருக்கின்றனர். அந்த டிராக்டரில் ஏறி அனைவரும் வந்து கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடையவை  பிறந்தநாள் கவிதை வாசித்த அசீம்..கண்கலங்கி நன்றி சொன்ன கமல்.! கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கமல்

மொய் விருந்தில் மொக்கை வாங்கிய மருமகள்கள்.! கோபத்தில் அடித்து உடைத்த கதிர்.! ப்ரோமோ இதோ.! 3

விளம்பரம்

அப்போது பின்னால் வரும் கரிகாலன் அவர்களை வீடியோ எடுத்துக் கொண்டே வருகிறார். இதை குணசேகரனிடம் போட்டு காண்பிக்கப் போவதாகவும் அவர் கூறுகிறார். பின்னர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வரும் கரிகாலன் ஒரு சிறப்பு விருந்தாளி வர இருப்பதாக கூறுகிறார். அப்போது ஒரு கார் வந்து நிற்கிறது. அதிலிருந்து குணசேகரன் இறங்குவாரா? என்ற சஸ்பென்ஸ் உடன் ப்ரோமோ நிறைவடைந்து இருக்கிறது.நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment