மார்க் ஆண்டனி – முழு திரைவிமர்சனம் TamilGlitz Rating (?/5)

எஸ். ஜே சூர்யா விஷால் ஆகியோர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தின் ட்ரைலர் தொடங்கி பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இன்று படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலரும் படம் மிக நன்றாக இருந்ததாகவும் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு சிரிப்பை வரவழைத்ததாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் விஷால் சில்க் ஸ்மிதாவாக நடித்தவர் போன்றவர்களின் நடிப்புக்காகவே இந்த படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறினர். தற்போது இந்த படத்தின் முழு விமர்சனத்தை காணலாம்.

மார்க் ஆண்டனி - முழு திரைவிமர்சனம் TamilGlitz Rating (?/5) 1

விளம்பரம்

1975 ஆம் ஆண்டு போன் மூலமாக கடந்த காலத்திற்கு செல்லும் கருவியை கண்டுபிடிக்கிறார் செல்வராகவன். இந்த கருவியை பயன்படுத்தி தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மாற்றுகிறார். அப்படி அவர் செய்யும் முயற்சியில் அவர் இறந்து போகிறார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த போன் விஷால் கையில் கிடைக்கிறது. இதை வைத்து தனது தந்தை ஆண்டனியால் தன்னுடைய வாழ்க்கை நடந்த சில விஷயங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் விஷால்(மார்க்). பிறகு என்ன நடந்தது? இதில் வில்லன் ஜாக்கி பாண்டியனின்(எஸ்ஜே சூர்யா) பங்கு என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தொடர்புடையவை  என் வாழ்வை உன் அன்பினால் நிரப்புகிறாய், லவ் யூ அம்மு.! கணவர் ரவீந்தர் பற்றி மஹாலக்ஷ்மி போட்ட பதிவு

மார்க் ஆண்டனி - முழு திரைவிமர்சனம் TamilGlitz Rating (?/5) 3
விஷால் அப்பாவாகவும் மகனாகவும் இரு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். இரண்டு கதாபாத்திரத்திலும் தன்னுடைய பங்கை மிகச் சிறப்பாக அளித்திருக்கிறார் விஷால். தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சாதகமாக மாற்றி நடிக்கும் திறமையுள்ள எஸ்.ஜே சூர்யா வழக்கம்போல இந்த படத்திலும் காமெடி கலந்த வில்லனாக பட்டையை கிளப்பி இருக்கிறார். சுனில், அபிநயா, ரிதுவர்மா, செல்வராகவன், நிழல்கள் ரவி, ஒய் ஜி மகேந்திரன் என அனைவருமே படத்தின் வெற்றிக்கு தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

விளம்பரம்

மார்க் ஆண்டனி - முழு திரைவிமர்சனம் TamilGlitz Rating (?/5) 5

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய கடைசியாக இயக்கிய சில படங்கள் சரியாக ஓடாத நிலையில் தற்போது மீண்டும் நகைச்சுவையான திரைக் கதையை எடுத்துக்கொண்டு அதில் சாதித்து காட்டியிருக்கிறார். இவர் இயக்கிய முந்தைய படங்களால் ஏற்பட்ட பார்வை தற்போது முற்றிலுமாக மாறி இருக்கிறது. படம் ஆரம்பித்த சில நிமிடங்கள் தொய்வு போதிலும் இரண்டாவது பாகமும் அதில் வரும் சில்க் ஸ்மிதா மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய காட்சிகள் வயிறு குலுங்க ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது தான் என்று சொல்ல வேண்டும். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே இருந்த போதிலும் திரைக்கதையும் ஒளிப்பதிவும் ஆக்ஷன் காட்சிகளும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  கமல் சார் முன்னாடி அசிங்கமா பேசி மாட்டிகிட்டேன்!!!விக்ரம் பட ஷூட்டிங்கின் போது நடந்த சம்பவம் பற்றி பேசிய லோகேஷ்!!!

மார்க் ஆண்டனி - முழு திரைவிமர்சனம் TamilGlitz Rating (?/5) 7

குறிப்பாக ஆடை வடிவமைப்பு நம்மை 1970 மற்றும் 1990 காலகட்டத்திற்கு அழைத்து செல்கிறது. ஜிவி பிரகாஷின் பாடல்கள், பின்னணி இசை, அவர் செய்த ரீமிக்ஸ் அனைத்துமே அருமையாக வந்திருக்கிறது. ரசிகர்களை எழுந்து ஆட்டம் போட வைக்கும் அளவிற்கு பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடல் வந்துள்ளது. படத்தில் பிளஸ் பாயிண்ட் ஆக பார்க்கப்படுவது எஸ் ஜே சூர்யாவின் நகைச்சுவையான நடிப்பு, விஷாலின் சண்டை காட்சிகள், இரண்டாம் பாதியின் திரைக்கதை, ஜிவி பிரகாஷின் பின்னணி ஆகியவை. மைனஸ் பாயிண்டாக பார்க்கப்படுவது முதல் பாதியில் தொடக்கத்தில் சில நிமிடங்களில் ஏற்பட்ட தொய்வு. லாஜிக் மீறல்கள்.

விளம்பரம்

மார்க் ஆண்டனி - முழு திரைவிமர்சனம் TamilGlitz Rating (?/5) 9
மொத்தத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.5/5

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Think Music India

விளம்பரம்

Leave a Comment