வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே..கணவர் புகைப்படம் முன்பு கண்கலங்கி சோகத்துடன் நிற்கும் மீனா

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீனாவின் கணவர் காலாமானர். இந்த செய்தி திரையுலகத்தை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. மீனாவுக்கும் அவரது கணவர் சாகருக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளனர். நைனிகா 2016ல் வெளியான தெறி படத்தில் விஜயின் மகளாக நடித்து இருந்தார். அழகாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் புயலாக வீசியது போல மீனாவின் கணவர் சாகருக்கு உடல்நிலை மோசமடைந்தது. அவர் இறப்பிற்கு காரணமாக சொல்லப்பட்டது அவரது நுழையீரல் செயலிழந்து போனது தான். அதற்கு முக்கிய காரணமாக பெங்களூருவில் அவர் வசித்த வீட்டின் அருகே புறாக்கள் அதிகம் இருந்துள்ளது. புறாக்களின் எச்சம் கலந்தை காற்றை அவர் தொடர்ந்து சுவாசித்த காரணத்தால்தான் அவரின் நுரையீரல் செயலிழந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே..கணவர் புகைப்படம் முன்பு கண்கலங்கி சோகத்துடன் நிற்கும் மீனா 1

விளம்பரம்

டிசம்பர் மாதம் முதலே சுவாசப் பிரச்சினையால் ஆக்ஸிஜன் கருவியின் உதவியுடன் சுவாசித்து வந்த அவருக்கு பிப்ரவரியில் கொரோனா தொற்று ஏற்படவே நிலைமை இன்னும் மோசமானது. இதனால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 95 நாட்களாக எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த புறா எச்சம் கலந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் தொற்று ஏற்படும் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். புறா மட்டுமின்றி, லவ் பேர்ட்ஸ், நாய் மற்றும் பூனை உதிர்க்கும் ரோமங்கள் ஆகியவை அது போல் அழற்சியை ஏற்படுத்தி நுரையீரலை செயலிழக்க வைக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடையவை  உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரிஷா நடிக்கும் 'தி ரோடு' படத்தின் ட்ரைலர் வெளியானது.!

வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே..கணவர் புகைப்படம் முன்பு கண்கலங்கி சோகத்துடன் நிற்கும் மீனா 3

விளம்பரம்

இந்த நிலையில் பலரும் மீனாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ரஜினிகாந்த், கேஎஸ் ரவிக்குமார், ரமேஷ்கண்ணா, சரத்குமார், கலா மாஸ்டர், ரம்பா போன்றவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இன்று அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் சோகம் கப்பிய முகத்துடன் செய்வதறியாது கணவரின் புகைப்படத்திற்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார் மீனா. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube video code embed credits: Indiaglitz

விளம்பரம்

Leave a Comment