வருண் அம்மா உயிரோடு இருக்கும் விஷயத்தை ஸ்ருதியிடம் போட்டு உடைத்த ருக்மணி.!

மௌன ராகம் தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வருணின் தாயார் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்திருக்கும் நிலையில் அவரை கடத்தி வைத்திருக்கிறார் ஷீலா. அந்த உண்மைகளை தற்போது காதம்பரியின் குடும்பத்தினரிடம் கூறி இருக்கிறார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். மனோகரின் மகன்கள் தான் வருண் மற்றும் தருண். இவர்களைத்தான் சக்தி மற்றும் ஸ்ருதி இருவரும் திருமணம் செய்து இருக்கின்றனர். மனோகரின் மனைவி கஸ்தூரி ஒரு தீ விபத்தில் இறந்துவிட்டார் என்று இத்தனை காலம் ஷீலா அனைவரையும் நம்ப வைத்து இருக்கிறார். அந்த தீ விபத்தை பார்த்த வருணனுக்கு சில காலமாக மன அழுத்தம் இருந்து வந்துள்ளது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

வருண் அம்மா உயிரோடு இருக்கும் விஷயத்தை ஸ்ருதியிடம் போட்டு உடைத்த ருக்மணி.! 1

விளம்பரம்

தனது அண்ணன் குடும்பத்தையே அழிக்க நினைத்த ஷீலா தீ விபத்தில் இறந்துவிட்டார் என்று பொய் சொல்லி அவரது அண்ணியையே கடத்தி வைத்திருக்கிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை கடத்தி தனியாக ஒரு வீட்டில் வைத்திருக்கிறார். அதே சமயம் அந்த தீ விபத்தை பார்த்து மனநோய் ஏற்பட்ட வருண் சரியாக விடக்கூடாது என்பதற்காக மாத்திரைகளை மாற்றிக் கொடுத்து வந்தார். இந்த விஷயம் தெரிந்து ஷீலாவை மனோகர் வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருந்தார். இதனால் காதம்பரி குடும்பத்திடம் தஞ்சம் புகுந்த ஷீலா அவரது வீட்டில் வசித்து வருகிறார். அடிக்கடி எங்கேயோ வெளியே சென்று வரும் ஷீலா மீது காதம்பரியின் தாயார் ருக்மணிக்கு சந்தேகம் வந்து விடுகிறது. இதனால் ஷீலாவை பின்தொடர்ந்து செல்கிறார் ருக்மணி.

தொடர்புடையவை  ப்ரியாவை பார்க்க நள்ளிரவில் வந்த சரவணன்..! நாடகமாடி போட்டுக்கொடுத்த பல்லவி..!

வருண் அம்மா உயிரோடு இருக்கும் விஷயத்தை ஸ்ருதியிடம் போட்டு உடைத்த ருக்மணி.! 3

விளம்பரம்

அங்கே சென்று பார்த்தபோது அவர் உடல் நலம் சரியில்லாத ஒரு பெண்மணியிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் ருக்மணிக்கு சந்தேகம் ஏற்பட்டது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காதம்பரி, விஸ்வநாதன், ருக்மணி ஆகியோரை அழைத்து வந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்தில் இறந்து போனதாக நம்பிக் கொண்டிருக்கும் எனது அண்ணி கஸ்தூரி இவர்தான் என்று ஷீலா உண்மைகளை போட்டு உடைத்து விடுகிறார். ஆனால் இதை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்கிறார். ஆனால் ருக்மணியோ நேராக ஸ்ருதிடம் சென்று இந்த உண்மைகளை கூறுகிறார். இதனால் ஸ்ருதி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment