15 வருடங்களுக்கு பிறகு உயிருடன் வந்த தாய்.! பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் வருண்.!

மௌனராகம் சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நாம் அனைவரும் மிகவும் எதிர்பார்த்து இருந்த வருணும் அவரது தாயரும் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு தற்போது நடந்திருக்கிறது. இதனால் வருணின் தாய் மீண்டும் தனது பழைய நினைவுகளுக்கு வருவாரா? நெருப்பை பார்த்து பயப்படாமல் இருப்பாரா? என்றெல்லாம் கேள்வி எழுந்துள்ளது. மௌன ராகம் தொடர் மக்களின் மனம் விரும்பிய தொடராக இருந்து வருகிறது. இது தற்போது மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரின் கதாநாயகன் வருணுக்கு சமீப காலமாக ஒருவித மனநோய் இருந்து வருகிறது. தனது தாய் 15 ஆண்டுகளுக்கு முன்பு தீப்பிடித்து இறந்து விட்டதால் நெருப்பை பார்த்தாலே அவனுக்கு பயம் ஏற்படுகிறது. குறிப்பாக தனது மனைவி சக்தியும் அது போல் இறந்து விடுவாரோ என்று மிகுந்த மன அழுத்தத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

15 வருடங்களுக்கு பிறகு உயிருடன் வந்த தாய்.! பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் வருண்.! 1

விளம்பரம்

ஆனால் வருண் அத்தை ஷீலா வருண் தாயாரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றி 15 வருடங்களாக கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார். இதை தெரிந்து கொண்ட ஸ்ருதியும், பாட்டி ருக்மணியும் வருணின் தாயாரை மீட்டு வருண் வீட்டிற்கே அழைத்துச் சென்று விட்டனர். இதனால் மன அழுத்தத்தில் இருக்கும் வருண் குணமடைந்து மீண்டு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்படுகிறது. தற்போது வருணை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். வீட்டிற்கு வந்த வருணுக்கு முன்னால் அவரது தாயார் கஸ்தூரியை அழைத்து வருகின்றனர். தாயாரை பார்த்ததும் எழுந்து நிற்கும் வருண் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அவரது தாயாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார்.

தொடர்புடையவை  பாரதி கண்ணம்மா திருமணத்தை தடுத்து நிறுத்திய சௌந்தர்யா.! இனி நடக்கப்போவது என்ன?

15 வருடங்களுக்கு பிறகு உயிருடன் வந்த தாய்.! பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் வருண்.! 3
இதைப் பார்த்த சக்தி கண்கலங்கி நிற்கிறார். தனது கணவர் எப்படியாவது குணமாகிவிட வேண்டும் என்று அவர் இத்தனை நாள் போராடிக் கொண்டிருக்கிறார். அதற்கு பலனாக, இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த வருணின் தாயார் மீண்டும் வந்துவிட்டார். இதனால் வருண் குணமாவாரா இல்லையா என்பது இந்த வாரம் தெரிந்து விடும். இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment