கண் விழித்து உண்மைகளை போட்டு உடைத்த ஜனார்த்தனன்.! வெளிச்சத்துக்கு வந்த பிரசாந்தின் சூழ்ச்சிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கத்தியால் குத்தி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மீனாவின் தந்தை கண் முழித்து போலீஸிடம் எல்லா உண்மைகளையும் கூறுகிறார். அதை போலீசார் போனில் ரெக்கார்ட் செய்து வாக்கு மூலமாக வாங்கிக் கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கண் விழித்து உண்மைகளை போட்டு உடைத்த ஜனார்த்தனன்.! வெளிச்சத்துக்கு வந்த பிரசாந்தின் சூழ்ச்சிகள் 1
பின்னர் அந்த வீடியோவை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கின்றனர். நீதிபதி வீடியோவை பார்த்த பின்பு பிரசாந்தை கைது செய்ய உத்தரவிடுகிறார். பின்னர் ஜீவா, கதிர் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லி அவர்கள் இருவரையும் விடுதலை செய்து பிரசாந்தை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். மீண்டும் வீட்டிற்கு வரும் ஜீவா, கதிரை ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர். தனது தம்பிகளுக்காக களத்தில் இறங்கி மூர்த்தி மீண்டும் அவர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளார். அத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  தாமரை சண்டை போடுவது போலவே மிமிக்ரி செய்து அசத்திய சாண்டி தீனா | BB Ultimate

கண் விழித்து உண்மைகளை போட்டு உடைத்த ஜனார்த்தனன்.! வெளிச்சத்துக்கு வந்த பிரசாந்தின் சூழ்ச்சிகள் 3
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment