விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரின் மனங்களை கவர்ந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். ஒருவருக்கோருவர் அறிமுகம் இல்லாத பதினாறு நபர்களை வீட்டின் உள்ளே 100 நாட்கள் அடைத்து வைத்து அவர்கள் செய்யும் வேலைகளையும், சண்டைகளையும், டாஸ்க் விளையாட்டுகளையும் ஒரு மணி நேர ஒளிபரப்பாக சுருக்கி காட்டுவர். வீட்டின் உள்ளே செல்போன், டிவி போன்ற எந்தவொரு பொழுதுபோக்கு அம்சமும் இருக்காது. இதனால் போட்டியாளர்கள் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வது வழக்கம். இதுதான் இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்புக்கும் வெற்றிக்கும் முக்கிய காரணம். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் தமிழில் பிக்பாஸ் 5 சீசன்களை முடித்து விட்டது. தற்போது ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. முதல் 5 சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். வார இறுதி நாட்களில் மட்டும் வரும் அவர் அந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகளை வைத்து போட்டியாளர்களை வறுத்து எடுப்பார். இதனால் வார இறுதி எபிசோடுகள் டி.ஆர்.பியில் அள்ளும். பிறகு 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தது விஜய்டிவி. இது டிவியில் ஒளிபரப்பாகாமல் ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. இதற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
அதனால் அல்டிமேட்டிலிருந்து கமல் விலகினார். பிக்பாஸ் சீசன் 6ஐ கண்டிப்பாக தொகுத்து வழங்குவேன் என்று கூறிவிட்டு விலகினார். பின்னர் மீதமுள்ள நாட்களை சிம்பு தொகுத்து வழங்கினார். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாத இறுதிக்குள் அல்லது செம்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளை தற்போதே தொடங்கியுள்ளது விஜய்டிவி. சீசன் 3 வரை நன்றாக போனது அதன் பிறகு கொரோனா தாக்கத்தால் சீசன் 4 மற்றும் 5 கொஞ்சம் சுணக்கமாக தான் போனது. விஜய் டிவி பிரபலங்களை மட்டுமே வைத்து பிக்பாஸ் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் சீசன் 6ஐ மிகவும் விறுவிறுப்பாக நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது பிக்பாஸ் டீம் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி குக் வித் கோமாளியில் ஆங்கராக இருக்கும் ரக்ஷன் முதல் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது. எப்போதும் குத் வித் கோமாளி முடிந்த பின்புதான் பிக்பாஸ் ஆரம்பமாகும், எனவே குக் வித் கோமாளி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரக்ஷன் பிக்பாஸில் கலந்து கொள்வார் என்றே தெரிகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றே தெரிகிறது.