ரவீந்தர் மஹாலட்சுமி வீட்டில் நடந்த விஷேசம்..! மகிழ்ச்சியான வீடியோவை பகிர்ந்த ரவீந்தர்.!

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் வீட்டில் தற்போது விசேஷம் ஒன்று நடந்துள்ளது. அதை ரவீந்தரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். லிப்ரா ப்ரோடக்ஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் தயாரிப்பாளர் ரவீந்திரன். இவருக்கும் மகாலட்சுமிக்கும் கடந்த வருடம் திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெற்றது. நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு வைரலான ஒரு திருமணம் என்று சொன்னால் அது ரவீந்தர் மகாலட்சுமி திருமணம்தான். திருமணம் முடிந்து இவர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த போது பலராலும் உருவக் கேலி செய்யப்பட்டனர். இருந்த போதிலும் மனம் தளராமல் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் தம்பதிகள். இதில் மகாலட்சுமி கடந்த 2007 ஆம் ஆண்டு ஒளிபரப்பான அரசி என்கிற தொடரின் மூலமாக சின்னத்திரைக்குள் அடி எடுத்து வைத்தவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரவீந்தர் மஹாலட்சுமி வீட்டில் நடந்த விஷேசம்..! மகிழ்ச்சியான வீடியோவை பகிர்ந்த ரவீந்தர்.! 1
நிகழ்ச்சி தொகுப்பாளனியாக வாழ்க்கை தொடங்கி இவர், பல நாடகங்களில் நடித்து முடித்து இருக்கிறார். ரவீந்தர் தயாரித்துக் கொண்டிருந்த ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ரவீந்திரனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் இவர்கள் திருமணம் ஆகி ஆறாவது மாத விழாவை சிறப்பாக கொண்டாடி இருந்தனர். ரவீந்தரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். மகாலட்சுமிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி 6 வயதில் மகன் ஒருவரும் இருக்கிறார். இந்த நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் பிடித்துப் போன காரணத்தினால் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு பின்பான பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வைரல் ஆகி வந்தது. பொங்கல், தீபாவளி என்று அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அவுட்டிங் செல்வது, டின்னர் செல்வது, கோவில்களுக்கு செல்வது என்று தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றனர் இந்த தம்பதிகள்.

விளம்பரம்
தொடர்புடையவை  பிரபுவை கொ லை செய்த கயலின் தங்கை? கயலுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! கயல் ப்ரோமோ

ரவீந்தர் மஹாலட்சுமி வீட்டில் நடந்த விஷேசம்..! மகிழ்ச்சியான வீடியோவை பகிர்ந்த ரவீந்தர்.! 3
இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கின்றனர். அதில் தங்கள் வீட்டில் யாகம் ஒன்றை நடத்தி இருக்கின்றனர். தங்களை விரும்பும் அனைவருக்கும், தங்கள் மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் அவர்கள் நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்று சொல்லி சண்டியாகம் செய்திருக்கிறனர் ரவீந்தர் மகாலட்சுமி தம்பதிகள். அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் ரவீந்தர். தற்போது அந்த வீடியோ வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment