சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் மாலத்தீவில் சென்று அலப்பறை செய்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து இன்று ரியல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்கிற சீரியல் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்கள். திரையில் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக, நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் youtube பக்கத்திலும் தங்களது சேனலை தொடங்கி அதில் Vlogs வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஸ்ரேயா. ஏற்கனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இருவரும் சமீபத்தில் தங்களது தல தீபாவளியை கொண்டாடி இருந்தனர். பட்டாசுகள் வெடிக்கும் வீடியோக்கள், அவர்கள் தீபாவளிக்காக செய்த ஷாப்பிங் வீடியோக்கள் அனைத்தையும் youtube சேனலை வீடியோக்களாக பதிவிட்டு இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ஆறு லட்சம் பேர் ஸ்ரேயாவை பின்தொடர்ந்து வருகின்றனர். மக்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக இவர்கள் இருவரும் இருக்கின்றனர். சமீபத்தில் கூட தனது காதல் மனைவிக்கு மோரிஸ் கேரேஜ் ரக காரை பரிசளித்திருந்தார் சித்து.

தற்போது இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு சித்துவுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக மிகப்பெரிய சர்பிரைஸ் ஒன்றை செய்துள்ளார். அந்த வீடியோவை சித்து தனது yotube பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். அங்கு ஜெட் ஸ்கை எனப்படும் கடலில் வண்டி ஓட்டும் வீடியோவையும், கடலில் குதித்து ஆட்டம் போடும் வீடியோவையும் பதிவேற்றி உள்ளனர். நீங்களும் அந்த வீடியோவை காண.! Watch the below video.!
Youtube video code embed credits: sidhu & shreya