80s 90s காலக்கட்டத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் பத்மஸ்ரீ உலக நாயகன் கமல் தனது அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசியலிலும் சினிமாவிலும் சமமான பங்கீட்டை அளித்துவரும் கமல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் நுழைந்து பல விதமான

கதாபாத்திரத்தில் நடித்து ரசிகள் பலரை ஈர்த்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் பிரதிநிதியாக விளங்கியவர். நடிகர், இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், என அவர் திரைத்துறையில் செய்யாத ரோல் இல்லை. தற்போது ‘இந்தியன் 2’ படம் சர்ச்சையில் சிக்க இருந்தாலும் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. நடிகர் திலகம் சிவாஜி மற்றும் உலகநாயகன் கமல் நடித்த தேவர்மகன்

படத்தின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுத ஆரம்பித்து விட்டதாக பேட்டி ஒன்றில் கமல் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் “மகேஷ் நாராயணன்” இயக்க உள்ளதாக பேட்டியில் கூறியுள்ளார். அப்படத்தில் மலையாள ஃபேம் ‘ஃபஹத் ஃபாசில்’ இணையப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் மகேஷ் கமலின் விஸ்வரூபம் படத்திற்கு எடிட்டராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
