தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கி உள்ளார். ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு இனி படத்தில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்து உள்ளார்.2026 சட்டமன்ற தேர்தல் இலக்கு என கூறிய அவர் யாருடனும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்தகட்டமாக முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளார் விஜய். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை முன்னிட்டு இன்று சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார். மேலும் தனது கட்சி பாடலையும் அவர் அறிமுகப்படுத்தி நெகிழ்ச்சி அடைந்து உள்ளார். நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் தனது கட்சிக்கொடியினை முதல் முறையாக தனது அலுவலகத்தில் பறக்க விட்டு உள்ளார்.

ஆனந்த கண்ணீருடன் தனது கட்சியின் கொடியை இன்று தனது அலுவலகத்தில் தளபதி விஜய் பறக்க விட்டுள்ளார். விஜய் கொடியை ஏற்றும்பொழுது அங்கிருந்த நிர்வாகிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து சத்தங்களை எழுப்பி உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தளத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.
#WATCH | Tamil Nadu: Actor and Tamilaga Vettri Kazhagam (TVK) chief Vijay unveils the party’s flag at the party office in Chennai.
(Source: ANI/TVK) pic.twitter.com/YaBOYnBG6j
— ANI (@ANI) August 22, 2024