தன் இளைய மகள் என்ன ஆனார் என்பது குறித்து வனிதா பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் தான் வனிதா. சர்ச்சைக்கு பெயர் போன வனிதா, ஆரம்பத்தில் சில படங்களில் நடித்து வந்தார். இவரின் முதல் படமே விஜயுடன் தான். சந்திரலேகா என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பிறகு தனக்கு படங்கள் சரியாக நடிக்க வராததால், இயக்குனர் பி வாசுவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். பின்னர் அதையும் விட்டுவிட்டு திருமண வாழ்க்கைக்கு மாறிய வனிதாவிற்கு மூன்று திருமணங்கள் நடைபெற்றது. ஆனால் மூன்று பேருடன் ஏற்பட்ட மனக்கசப்பாலும், தனது தந்தை விஜயகுமார், மஞ்சுளாவிடமும் ஏற்பட்ட சொத்து பிரச்சனையால் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இவரின் முதல் கணவர் சின்னத்திரை நடிகர் ஆகாஷ் ஆவார். இவர்களுக்கு பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி வெளிநாட்டில் படித்து வருகிறார். அவரும் வனிதாவுடன் பேசுவதில்லை் மேலும் தனது மகள்கள் ஜோவிகா மற்றும் ஜெயனிதாவுடன் தனியாக வாழ்ந்து வந்தார் வனிதா. இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் வனிதா. பிக்பாஸ்க்கு பின்னர் அவர் பெரிதும் பேசப்பட்டார். சர்ச்சையான போட்டியாளராகவும் இருந்து வந்தார். ஆனால் சமீப காலமாக தனது இளைய மகள் ஜெயனிதாவை வீடியோக்களிலோ அல்லது பொது இடங்களிலோ அவர் காட்டுவதே இல்லை. இதற்கான காரணம் குறித்து தெரியாமலே இருந்து வந்தது.

சமீபத்தில் ஒரு நாள் தன் இளைய மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மட்டும் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் ஒரு ஒரு பேட்டியில் ஜெயனிதா குறித்து வனிதா பேசி இருந்தார். அப்போது கூறும்போது ஜெயனிதாவை அவரது தந்தையுடன் ஹைதராபாத்க்கு அனுப்பி வைத்து விட்டதாகவும், அங்கு படித்து வருகிறார், ஷூட்டிங்கில் தான் பிஸியாக இருப்பதால் அவரை சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை ஆனால் அவரது தந்தையுடன் அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்று பேசி இருக்கிறார் வனிதா.
#Vanitha About Her Second Daughter pic.twitter.com/ViSDykqTvI
— chettyrajubhai (@chettyrajubhai) September 25, 2022