இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் ‘விடுதலை’. இந்த திரைப்படம் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு வருகிறார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த வருடம் மே மாதத்திற்குள் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டரிடேம் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை படத்தின் பாகம் ஒன்று மற்றும் பாகம் 2 ஆகியவை திரையிடப்பட்டன. இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் எழுந்து நின்று 3 நிமிடங்கள் கைதட்டி இருக்கின்றனர். அந்த வீடியோவை தற்போது சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பாகம் 2 மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த நிலையில் சூரி வெளியிட்டுள்ள வீடியோ தமிழ் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. பாகம் ஒன்றில் சூரி, விஜய் சேதுபதியை பிடிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

அதன்பின்னர் என்ன நடந்தது? விஜய் சேதுபதி உண்மையிலேயே நல்லவரா? கெட்டவரா? என்ற பல கேள்விகளுக்கு விடையாக இரண்டாம் பாகம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் 3 நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டல்களை பெற்றிருக்கும் வீடியோவை சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2 க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த
நெகிழ வைக்கும் பாராட்டு இது!! தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது… 🙏
#Viduthalai… pic.twitter.com/ID1afWZjpC— Actor Soori (@sooriofficial) February 1, 2024
Twitter Original Source from: Soori