இங்க யாரு விடியலை பாக்க போறாங்கன்னு நான்தான் முடிவு பண்ணுவேன் – ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்|Vikram official trailer|Kamal Hassan|VJS|FAFA|Lokesh Kanagaraj|Anirudh.

ரஜினியை போல் இல்லாமல் கமர்சியல் படங்கள் இல்லாமல் மாறுபட்ட கதையமைச்சத்தில் உருவாகும் படங்களில் நடித்து வந்த கமல், விஸ்வருபம் 2 படத்திற்கு பிறகு அரசியலுக்கு சென்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு  சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் நீண்ட ஆண்டுகள் பிறகு கமர்சியல் படங்களுக்கு திரும்பியுள்ளார். Trailer Link below.

இங்க யாரு விடியலை பாக்க போறாங்கன்னு நான்தான் முடிவு பண்ணுவேன் - ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்|Vikram official trailer|Kamal Hassan|VJS|FAFA|Lokesh Kanagaraj|Anirudh. 1

விளம்பரம்

பரபரப்பாக தொடங்கிய இந்தியன் 2 படம் பாதியில் நின்று விட, தற்போது இளம் வெற்றி இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் கூட்டணியில் விக்ரம் என்ற படம் நடித்து முடித்துள்ளார். 1986இல் வெளியான கமலின் விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக வெளியாகவுள்ள இந்த படம் தான் இப்பொது கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாகவுள்ளது.

படத்திலிருந்து “பத்தல பத்தல” என்ற பாடல் வெளியாகி பெரும் வெற்றியடைந்துள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் தற்போது வெளியாகி உள்ளது. படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ளது. படத்திற்கு அனிருத் இசைமயக்க நரேன், ஷிவானி நாராயணன் போன்றோரும் நடித்துள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக நடிகை சுகன்யா செய்துள்ள மிக பெரிய செயல்.! குவியும் பாராட்டுக்கள்

இங்க யாரு விடியலை பாக்க போறாங்கன்னு நான்தான் முடிவு பண்ணுவேன் - ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்|Vikram official trailer|Kamal Hassan|VJS|FAFA|Lokesh Kanagaraj|Anirudh. 3

சினிமாவில் உள்ள அனைத்து கலைகளையும் கரைத்து குடித்துள்ள கமலும், கமர்சியல் படங்களில் புது மாதிரியாக கையாண்டு தொடர்ந்து மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்த லோகேஷும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது. உண்மையில் கைது படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது வாங்கியபோது தான் எந்த டைரக்டரிடமும் பணியாற்றவில்லை, தனியாக படிக்கவில்லை, இவருடைய படங்களை பார்த்தே சினிமாவை கற்று கொண்டேன் எனக் கூறிய லோகேஷ் மிக பெரிய கமல் ரசிகர் என்பதால் இந்த தலைமுறை பார்க்கா தவறிய கமலை அவர் இந்த படத்தின் மூலம் காண்பித்து மீண்டும் மெகா ஹிட் படம் ஒன்றை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment