தந்தை பெரியாரின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அவரது சித்தாந்தத்தை பரப்புவதற்கான வாய்ப்பாகவும், தற்போதைய சூழ்நிலைக்கு அதன் பொருத்தமாகவும் இருப்பதனால் கொண்டாடப்படுகிறது. பெரியாரின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
பல முற்போக்கான சிந்தனையாளர்கள் தங்கள் வாழ்நாளில் அங்கீகரிக்கப்படாமல் இருந்தனர். ஆனால் பெரியாரைப் பொறுத்தவரை இதுவேறவாக இருந்தது. அவரது பல கொள்கைகள் அவரது வாழ்நாளிலேயே நடைமுறையில் முன்மொழியப்பட்டன மொழிபெயர்க்கப்பட்டன. மேலும் ஆட்சியாளர்களால் இத்தகைய நடைமுறைகளுக்கு வழங்கப்பட்ட சட்டப்பூர்வ அனுமதியை அவர் கண்டார். மாநில அளவில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்தும், சட்டமன்றத்தின் ஒப்புதலை பெற்றதிலிருந்தும், பெரியாரின் சித்தாந்தம் தேசிய அளவில் பரந்தது. தற்போது அதையும் தாண்டி இந்த நடைமுறை உலகளவிற்கு சென்றுள்ளது.
புரட்சிகரமான நடைமுறைகளை துவங்கும் போது, அவை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து தொடங்க வேண்டும். அது, அங்கு வசிக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்.
ஆனால், கொள்கைகள் அத்தகைய வரையறுக்கப்பட்ட நிலப்பரப்போடு சார்ந்தது என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவின் உணர்வை வலியுறுத்துவது தான் பெரியாருடைய தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஏற்றத்தாழ்வுகளால் உருவாக்கப்படும் பாகுபாடுகள், மனிதகுலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் தடையாய் இருக்கும் என பெரியார் நம்பினார். அதனை நீக்க தான் அவர் பாடுபட்டார். அவருடைய தத்துவம் மனிதகுலத்தின் ஒருகுறிப்பிட்ட பகுதி சமூகத்திற்கு பயனளித்திருக்கலாம். ஆனால் அதன் நோக்கமும், அது பொருந்தக்கூடிய தன்மை இன்னும் விரிவானது. 1925 ஆம் ஆண்டு சுய மரியாதை இயக்கத்தை தொடங்கியபோது பெரியாரே அதனை விளக்கினார்.
“சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவம், குறிக்கோள் மற்றும் உட்குறிப்பு ஆகியவை உலகளவில் ஒப்புதலை பெற்றுள்ளது. – “குடி அரசு ‘சுய மரியாதை இயக்கம் ஏன் நிறுவப்பட்டது?’ பெரியார்”
குடியரசு இதழில் எழுதப்பட்ட கட்டுரையில், தனது சொந்த வாழ்க்கையின் கருத்தை புரிந்து கொள்ள முடியாமல், அடிமை வாழ்க்கையை நடத்துகிறான் மனிதன். இதன் தொடர்ச்சியாகவே மனிதன் ஒவ்வொரு கருத்திற்கும் அதன் தேற்றுவாயை தேடுகிறான். எல்லாவற்றிகுமான காரணத்தையும், தர்க்கரீதியான அடிப்படையையும் ஆராய்கிறான். மேலும் இயற்கையை ஆய்வு செய்ய முற்படுகிறான்.
சுயமரியாதை இயக்கம், எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னல் உள்ள பகுத்தறிவைக் காண வேண்டும் என்றும் அதற்கு தர்க்கரீதியான அடிப்படை இல்லாவிட்டால் அதை நியாயமற்றது என்று நிராகரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. இப்படி ஆராய்ந்து பார்க்கும் போது நமது செயல் சரியானதா அல்லது தவறானதா என்பது தெரிந்துவிடும். இப்படி ஒருவர் நன்மை தீமைகளை எடைபோட்டு, எது அவனை வழிநடத்தும் என முடிவை எடுக்க வேண்டும். இது தான் சுயமரியாதை இயக்கத்தின் சிறப்பியல்பு. எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதற்கு எதிரானது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரு மனிதன் தனது எண்ணங்கள், செயல்கள் மற்றும் முடிவுகள் சரியானவை என்பதைக் கண்டறிந்தால், அது மதிக்கப்பட வேண்டும். அது உண்மையான சுதந்திரம். சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவை ஒத்தவை.
சமூக நீதி தளத்தில், பெரியாரின் தேவைகளும், அவருடைய சிந்தனைகளும் இன்றைய இந்தியாவின் தேசிய அளவில் நன்றாகவே உணரப்பட்டுள்ளன. மனிதர்களின் சமத்துவம் குறித்து அவர், எதனை நினைத்து 1920களில் முதல் தொடர்ந்து பிரச்சாரம் செய்தாரோ, அதன் வீரியம் நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு அதிக தீவிரத்துடன் இருந்தது.
தமிழகத்தில் சமூக நீதியை வழங்குவதில் கணிசமான முன்னேற்றம், பல மாநிலங்களில் இன்றளவும் தொடங்கவில்லை. அந்த மாநிலங்களில் உள்ள மக்கள் தங்கள் சமூக மற்றும் அரசியல் வலுவூட்டலுக்கு பெரியாரின் தேவையை இப்போது உணர்ந்துள்ளனர்.
பசியின் தன்மை தீவிரமாக உணரப்படும்போது உணவின் உடனடி தேவை எழுகிறது. அதேபோல, ஏற்கனவே சலுகை பெற்ற மக்கள், சமூக நீதியை எதிர்க்கிறார்கள். அவர்கள் வரலாற்று ரீதியாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் சலுகைகளை பறிக்க தொடங்கியபோது, பெரியாருடைய சமூக நீதியின் தேவை எழுந்ததுள்ளது.
சமூக நீதியை நிலைநாட்ட பயன்படும் முறைகளில் ஒன்றான இடஒதுக்கீடு கொள்கையை, பலவீனம் படுத்துவதற்காக பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் சாதியினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சமூக நீதிக்கான ஆபத்து. இதனால் தற்போது ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக நீதி தளத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் பெறுவதற்காக போராட்டத்தைத் தொடங்கினர். மேலும், பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட “பெண் விடுதலை” பலன்களைப் பெற்றுள்ளது. இது அதிகாரமளிக்கும் நிலையை நோக்கி முன்னேறியுள்ளது. பல பெண்கள் இன்று மாநில, மத்திய நிர்வாகத்தில் பல முக்கியமான பதவிகளை வகிக்கின்றனர்.
பெரியாரின் 141 வது பிறந்தநாளில் சமூக நீதியின் பரந்த தேவை அதிகம் உணரப்பட்டுள்ளது. உலகளவில், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவதும் அதிகரித்து வருகிறது. அவர்களுடன் பிறந்த சுய மரியாதையையும் பகுத்தறிவையும் யாராலும் மறுக்க முடியாது.
பெரியாரின், சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுவாதம் பற்றிய புரிதல், சமூகங்களில் நிலவும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளின்படி வெவ்வேறு கோணங்களில் புரிந்துகொள்ளப்படும். அந்த வகையில் பெரியாரின், ‘சுய மரியாதைக்குரிய மனிதநேயம்’ என்பது எல்லா மனிதர்களால் மாறாமல் கடைபிடிக்கப்பட வேண்டிய சிறந்த கொள்கையாகும்.
“Modern Rationalist” இதழில் இருந்து. தமிழில் விடுதலை தமிழ்முரசு.