தொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும்.. வைகைக் கரை வரலாறு பதியட்டும்…! என அறிக்கை விடுவித்தார் வைகோ!!

தொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும்.. வைகைக் கரை வரலாறு பதியட்டும்...! என அறிக்கை விடுவித்தார் வைகோ!! 1

வைகை ஆற்றுக்கருகில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்று வருகிற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ள பொருட்கள், கருவிகள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்டிருந்த கிரேக்க இலக்கியங்களில், மதுரை நகரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பல நாடுகளின் தூதர்கள் பாண்டிய மன்னனின் அவையில் வந்து இருப்பதற்கான வரலாறு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மதுரை வைகை ஆற்றில் சிறுவர்களால் பழங்கால ரோமாபுரி நாணயங்கள் சேகரித்து பழம் பொருட்கள் கடையில் விற்பனை செய்து வந்தது என தகவல்கள் பல எழுத்தாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

அதனை தொடர்ந்து, கீழடி ஆய்வு, அங்கே கிடைத்துள்ள நூற்றுக்கு மேற்பட்ட பொருட்கள் பொருட்கள், அயல்நாடுகளுக்கு ஆய்விற்கு அனுப்பப்பட்டு, ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, அவைகள் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தின் தொன்மை குறித்த ஆய்வுகளை மத்திய அரசு புறக்கணித்தே வருகின்றது. அதற்காகத் தமிழகம் போராட வேண்டியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உரிய நிதி வழங்குவது இல்லை. ஊக்குவிப்பதும் இல்லை.கீழடி ஆய்வுகள் குறித்து 2017 மார்ச் 17 அன்று அமைச்சர் மகேஷ் சர்மா அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளேன். பள்ளிப் பாடங்களில் பொதுவாக இந்திய வரலாறு என்ற பெயரில் அசோகர், அக்பர் என வட இந்திய வரலாறையே முதன்மையாகக் கற்பித்து வருகின்றன. பண்டித நேருவால் போற்றப்பட்ட தமிழக வரலாற்றை, சேர சோழ பாண்டியர்களைப் புறக்கணித்து வருகின்றார்கள். இந்த நிலை இனியும் தொடரக்கூடாது என கூறினார்.

தொடர்புடையவை  குளிர்கால கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது!

தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளுக்காக மேலும் பல இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கின்றது. கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கின்ற காவிரிபூம்பட்டினம் உள்ளிட்ட நகரங்களின் விரிவான வரலாறு ஆய்வுகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஊக்கம் அளித்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment