முதலமைச்சரை விமர்சனம் செய்த மு.க. ஸ்டாலின் !!

முதலமைச்சரை விமர்சனம் செய்த மு.க. ஸ்டாலின் !! 1

இஸ்‌ரேல் செல்வதாக முதல்வர் கூறுவது வேடிக்கையாக உள்ளது ..மு.க.ஸ்டாலின் விமர்சனம்…

உள்ளூரில் நீரைச் சேமிக்க முயற்சி செய்யாமல் நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் செல்கிறேன் என முதலமைச்சர் அறிவித்தது வேடிக்கை மிகுந்த வினோதம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்திருக்கிறார்.

விளம்பரம்

இது தொடர்பாக அவர் கூறியுள்ள அறிக்கையில்,
கொள்ளிடம் ஆற்றிலிருந்து 20,000 கன அடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகுவதை பற்றி தமிழக அரசு கவலைப்படாதது மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட காவிரி கால்வாய் தூர்வாரும் திட்டத்தை அதிமுக அரசு கைவிட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி.தண்ணீரை தேக்கி வைக்க கடலூர்-நாகை மாவட்டங்களுக்கு இடையில் ரூ.480 கோடி செலவில் தடுப்பணை கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்தார் என்றும், ஆனால் அறிவிப்பு வந்து 5 வருடங்களாகியும் அதிமுக அரசு சார்பில் எந்த பணியையும் முன்னெடுக்கவில்லை என கூறியிருக்கிறார்.

விளம்பரம்

நானும் ஒரு விவசாயி என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லும் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை படுகுழியில் தள்ளி மண்ணை போட்டு மூடுவதிலேயே கவனமுடன் இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், நீர் மேலாண்மை திட்டத்தில் அதிமுக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

தொடர்புடையவை  கமலேஷ் திவாரி கொலைவழக்கு: கதைகளின் கதை!

ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை திட்டத்தையாவது தமிழக அரசு விரைந்து செயல் படுத்த வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment