யு19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி!

யு19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி! 1

யு19 ஆசிய கிரிக்கேட் கவுன்சில் ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜூனியர் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டியில் இந்திய அணி தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.

விளம்பரம்

19 வயது இளையோருக்கான கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைப்பெற்று வந்தது. சென்ற வியாழக்கிழமையன்று நடக்கவிருந்த இரு அரையிறுதி போட்டிகளும் கைவிடப்பட்டன. ஆதலால் அந்தந்த குழுக்களில் அதிக புள்ளிகள் பெற்ற இந்தியா யு19 மற்றும் வங்காளதேசம் யு19 அணிகள் இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 32.4 ஓவர்களில் 107 ரன்களை எடுத்தது. மூன்று இந்திய பேட்ஸ்மேன்களால் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை அடைய முடிந்தது. அதிக பட்சமாக இந்திய அணியின் கேப்டன் துருவ் ஜூரேல் 33 ரன்களும் மற்றும் ஆல்ரவுண்டர் கரண்லால் 37 ரன்களும் எடுத்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  தோனியின் 41-வது பிறந்தநாள்..லண்டனில் வேற லெவல் சர்ப்ரைஸ் செய்த மனைவி சாக்ஷி | Dhoni Birthday Video

வங்காளதேச அணி 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டத்தை இழந்து வெளியேறினர். இறுதியில் வங்காளதேச அணி 33 ஓவர்களில் 101 ரன்களை எடுத்து இந்திய அணியிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அதர்வா அங்கோலேகர் ஐந்து இறுதி விக்கெட்டுகளையும் ஷமீம் உசேன் மூன்று விக்கெட்களையும் எடுத்தனர்.

அதர்வா அங்கோலேகர் ஐந்து இறுதி விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். போட்டியின் நாயகனாக அர்ஜுன் ஆசாத் தேர்வு செய்யப்பட்டார்.

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment