மிதாலி ராஜின் 20ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை!

இன்றுடன் (அக்.09) சர்வதேச போட்டியில் தனது 20ஆம் ஆண்டினை நிறைவு செய்துள்ளார் இந்தியாவின் மிதாலி ராஜ். இதன் மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் இந்த மையில் கல்லை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒரு போட்டி வதோதராவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் விளையாடியதன் மூலம் இந்த மைல் கல்லை எட்டியிருக்கிறார் மிதாலி ராஜ்.

விளம்பரம்

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் மிதாலி, கடந்த நூற்றாண்டில், அயர்லாந்துக்கு எதிராக ஜூன் 26, 1999ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இவர் 204 ஒருநாள் போட்டி, 10 டெஸ்ட் மற்றும் 89 டி20 போட்டிகளில் விளையாட்டியுள்ளார்.

மிதாலி ராஜின் 20ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை! 1
மிதாலி ராஜ்

மேலும், அதிக எண்ணிக்கையிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடி உலக சாதனையையும் இவர் படைத்துள்ளார். இப்பட்டியலில் இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் (191), ஜூலன் கோஸ்வாமி (178), ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் பிளாக்வெல் (144) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  WWE நிகழ்ச்சியில் பங்கேற்கும் கார்த்தி? புது வீடியோவை வெளியிட்ட சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.!

ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்தி வரும் மிதாலி, 2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு டி 20 போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

36 வயதான இவர், 2012, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக மகளிர் டி20 தொடர்களில் விளையாடி இருக்கிறார்.

விளம்பரம்

டி20 போட்டியில் மொத்தம் 2364 ரன்கள் குவித்து 97 ரன்களை அதிகபட்சமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், தனது 20ஆம் ஆண்டு நிறைவு பெற்றது மிதாலியின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது. இன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றள்ளது. இப்போட்டியில் இவர் 11 ரன்கள் எடுத்திருந்த போது இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 6731 ரன்கள் குவித்துள்ளார். 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே இவரின் அதிகபட்சமாகும். அதே போல் டெஸ்ட் போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக 214 ரன்களோடு 663 ரன்களை எடுத்துள்ளார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் உலகில் அதிக ஆண்டுகள் விளையாடிய பெருமை இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரையே சாரும். அவர் மொத்தம் 22 ஆண்டுகள் 91 நாட்கள் விளையாடி உள்ளார். அதே போல் இலங்கையின் ஜெயசூர்யா 21 ஆண்டுகள் மற்றும் 184 நாள்கள் விளையாடியுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மீண்டும் அணியில் பிராவோ

சச்சின், ஜெயசூரியா போன்ற முன்னனி கிரிக்கெட் வீரர்கள் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் மிதாலி ராஜ் இன்னும் களத்தில் வலுவாக இருக்கிறார். ஆகையால் இவர்களின் சாதனைகளை முறியடிக்க இவருக்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment