100 கோடி வசூலை அள்ளி சாதனை செய்த அசுரன்! குவியும் வாழ்த்துக்கள்!!

100 கோடி வசூலை அள்ளி சாதனை செய்த அசுரன்! குவியும் வாழ்த்துக்கள்!! 1

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து அக்டோபர் 4ம் தேதி வெளியான படம் அசுரன். வடசென்னை படத்தை அடுத்து இவர்களது கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் நான்காவது முறையாக இணைந்திருக்கிறது. தாணு தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளர்.

எழுத்தாளர் பூமணியின் நாவல்களில் ஒன்றில் ‘வெட்கை’ என்ற நாவலை தழுவி அசுரன் படம் எடுக்கப்பட்டுள்ளது. தனுஷின் தமிழ் திரையுலக வரலாற்றில் அசுரன் படம் ஒரு முக்கிய திருப்பு முனையாகவும் மைல் கல்லாக அமையும் விதத்தில் உள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக பச்சையம்மாள் என்ற பெயரில் மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து உள்ளார்.இவர்களுடன் சேர்ந்து அம்மு அபிராமி, கருணாஸ் மகன் கென், பாடகர் டீ,ஜே, பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

விளம்பரம்

சமூகத்தில் பெரும் பிரச்சனையாக நிலவும் சாதி பிரச்னைகளோடு தொடர்புடைய பஞ்சமி நில மீட்பு பிரச்சனை மைய்யப்படுத்தி அசுரன் படம் உருவாகி உள்ளது. இந்தியா முழுவதும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் தனுஷின் தமிழ் திரையுலக பயணத்தில் இது ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மட்டுமின்றி திரைபிரபலங்கள் பலரும் தனுஷ் நடிப்பிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் அசுரன் படம் மொத்தமாக 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இது தனுஷ் ரசிகர்கள் மத்தியல் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளார் . இதையொட்டி #AsuranEnters100CroreClub என்ற ஹாஷ் டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடையவை  என்னயா படம் இப்படி இருக்கு? ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விஷயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த மாதவன்

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment